Translate

செயற்கை நுண்ணறிவு (AI) மொழி மாதிரி - முற்றிலும் இலவசம்

சமீபகாலமாக இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட புரட்சிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.  நீயா நானா என்கின்ற போட்டி தொடர்ந்து ஜாம்பவான்களுக்கிடையே நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது இதனை உடைத்திட ஓபன் சோர்ஸ்  கொள்கையில் ஏற்பட்ட பெரிய முன்னேற்றம், அனைவருக்கும் அனைத்தும் எளிதில் கிடைத்திட என எல்லா பெரிய சாஃப்ட்வேருக்கும் இணையான இலவசமான சாப்ட்வேர்கள், அனைவருக்கும் பயன்பட என சில அமைப்புகள் அவ்வப்பொழுது வெளியிட்டு பெரிய ஜாம்பவான்களையே ஆட்டம் காண வைப்பார்கள். 


அப்படி சில சம்பவங்கள் ஆரம்பத்தில் இருந்தே வந்து கொண்டு தான் இருக்கின்றது. சமீபத்தில் OPEN AI மற்றும் Google ஜெமினியின் சேட் எல் எல் எம்களையே கொஞ்சம் ஆட்டம் காண வைத்த டீப் சீக் ஏ ஐ பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். 


தற்பொழுது மற்றொன்று சாரி ஒன்று அல்ல இரண்டு, இரண்டுமே ஓபன் சோர்ஸ் என்பது தான் அதன் விஷயமே. ஆனால் அவை இரண்டுமே வெப் பிரவுசர்களில் மட்டுமே பயன்படுத்தும் படி தற்சமயம் உள்ளது விரைவில் தனித்தனியாக வெளிவரும் என்று எதிர்பார்ப்போம். 


முதலாவதாக TULU 3 என்பதை பற்றி பார்ப்போம் TULU 3  என்பது ஏலன் இன்ஸ்டிட்யூட் பார் ஏஐ (Allen Institute for AI) என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி மாதிரி. இது எல் எல் ஏ எம் ஏ 3.1 கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதுடன் மட்டுமல்ல முற்றிலும் இலவசமாக இருப்பதும் இதன் சிறப்பம்சம். 


இதற்கான வடிவமைப்பு மிக எளிதாக அமைத்திருப்பதும் இந்த இயக்கம் வேகமாக இருப்பதற்கும் இதன் சிறப்பாக கருதப்படுகிறது. இதற்கான Reasoning அதாவது கேள்விகளை பகுத்தறியும் தன்மை அந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் எதிர்பார்ப்பது போன்று தருவது, அதாவது மிக எளிதாக புரியும் படி இருப்பது நமக்கு நல்ல ஒரு பலனை அளிக்கிறது. 



நான் பயன்படுத்தி பார்த்ததில் நன்றாகவே உள்ளது. பட் எனது தேடல் பெரிதாக இல்லை, இருந்தபோதிலும் நன்றாகவே இருந்தது. தமிழில் சில கேள்விகளை கேட்டதற்கு தகுந்த பதிலை அழகாக தந்தது முற்றிலும் இலவசம் என்பதால் பயன்படுத்தி பார்க்கலாம்.


அதற்குரிய லிங்க் இதோ… 


https://playground.allenai.org/


மற்றொன்று சீன கம்பெனி தான் நம்பலாமா என்று தெரியவில்லை, இருந்தாலும் இதுவும் ஓபன் சோர்ஸ் என்பதால் பயன்படுத்தி பார்க்கலாம். நாம் முன்பு டிக் டாக் என்ற ஒரு ஆப்பினை பார்த்திருப்போம் அதிகமான நபர்கள் உபயோகித்து இம்சித்தும் இருப்பார்கள். அந்த ஆப்பின் நிறுவனமான Byte Dance எனும் அமைப்பின் மொழி மாதிரி வெளியீடு தான் அடுத்து நாம் பார்க்கவிருக்கும் LLM. செயற்கை துண்ணறிவு மொழி மாதிரி. 



UI TAR என்று பெயரிடப்பட்டு  இருக்கும் இந்த மொழி மாதிரியும் வெப் பிரவுசரில் பயன்படுத்தும் படி அமைந்திருக்கிறது.  இதற்கென கோடுகள் (code) கொடுத்திருப்பதால் அதனை நாம் ஆப்பாக மாற்றிக் கொள்ளலாம். 


இதுவும் ஓபன் சோர்ஸ் என்பதால் பயன்படுத்தி பார்க்கலாம் இந்த இரண்டும் இதற்கு முன் ஜாம்பவான்களான open AI அதாவது Chat GPT மற்றும் கூகுள் ஜெமினி போன்றவர்களையும் மைக்ரோசாப்ட் இன் Co-pilot ஆகியவற்றையும் ஆட்டம் காண வைத்த Deep Seek AIயே கொஞ்சம் பயம் காட்டிவிட்டது என்பது தான் உண்மை. எப்படியோ நமக்கு நன்மை நடந்தால் சந்தோஷம்தான்.


-S.B.


Post a Comment

Previous Post Next Post