ஆங்கிலம் அறிவோமே 61
போட்டியில்
கேட்டுவிட்டால்?
Thirty kilometers __________ in these days of fast moving vehicles.
a) are not a great distance
b) is not a great distance
c) is not a distance
d) aren’t a great distance
இங்கே 30 கிலோ மீட்டர் என்பது ஒரு singular subject. ஒவ்வொரு கிலோமீட்டரையும் குறிக்காமல் ஒட்டுமொத்தமாக 30 கிலோமீட்டரையும் குறிக்கிறோம். எனவே அதற்குப் பக்கத்தில் is என்பதுதான் வர வேண்டும்.
“வேகமான வண்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் இந்நாட்களில் 30 கிலோ மீட்டர் என்பது ஒரு ‘பெரிய’ தூரமே அல்ல” என்பதுதான் சரியான விடையாக இருக்கும். ஆனால், வண்டிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால்தான் ஒரு கிலோ மீட்டரை கடக்கக்கூட அதிக நேரமாகிறது என்பது வேறு விஷயம்!.
எனவே Thirty kilometers is not a great distance in these days of fast moving vehicles என்பதுதான் சரியான விடை.
கேட்டாரே ஒரு கேள்வி
Greenhorn என்பது எந்த வகை இசைக் கருவி?
-------------------------------
Romedy, Hungama என்று சில டி.வி. சேனல்கள் உள்ளனவே, அந்தச் சொற்களின் பொருள் என்ன என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.
‘ஹங்காமா’ என்பது இந்திச் சொல். அதன் பொருள் விதவிதமான, வேடிக்கையான, கொண்டாட்டமான விஷயங்கள். (கோணங்கித்தனமான என்றும் சொல்லலாம்). இந்தச் சொல் ஆங்கிலத்திலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது.

Romedy என்பது
Romance, Comedy ஆகியவற்றின்
கூட்டு.
சில டி.வி. சேனல்களின் பெயர்கள், குறிப்புகளாக அளிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடியுங்கள். உங்கள் விடைகளை விரைவில் அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
1. ‘Ha Ha’ in Tamil
2. Very large
3. Potassium
4. An American comic strip, created by cartoonist Walt Kelly
5. Nylon is an example of this
6. Kalady was his birthplace
7. A rainbow is known for these
8. Tamil equivalent of a service no more available in India
9. Person in command of a ship
10. Nelumbo nucifera
11. Finding something that had not been known before
12. At the centre of the solar system

Hurricane என்பதற்கும்,
Tornado என்பதற்கும் என்ன வித்தியாசம்?
Hurricane என்பதைச்
சூறாவளி என்றும், Tornado என்பதை
சுழல் காற்று என்றும் தோராயமாகச் சொல்லலாம்.
பொதுவாக அட்லாண்டிக் கடல், வடகிழக்கு பசிஃபிக் கடல் ஆகிய பகுதிகளில் தோன்றும் பெருங்காற்றை Hurricane என்கிறார்கள். The hurricane downed trees and blew roofs off of some houses.
ஸ்பானிஷ் மொழியில் Hurricane
என்பது
‘புயலுக்கான கடவுளைக்’ குறிக்கிறது. இதிலிருந்துதான் hurricane
என்ற
சொல் வந்திருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் போர் விமானத்துக்கும் Hurricane என்று பெயரிடப்பட்டது. இதை பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியது.
கடும் இடி, மின்னல், புயல் ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது Tornado உருவாகிறது. குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது இது. அப்போது சுழன்றடிக்கும் காற்று ஏதோ புயல் வடிவ மேகம்போல் காட்சிதரும்.
பொதுவாக அட்லாண்டிக் கடல், வடகிழக்கு பசிஃபிக் கடல் ஆகிய பகுதிகளில் தோன்றும் பெருங்காற்றை Hurricane என்கிறார்கள். The hurricane downed trees and blew roofs off of some houses.
இரண்டாம் உலகப் போரின்போது தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் போர் விமானத்துக்கும் Hurricane என்று பெயரிடப்பட்டது. இதை பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியது.
கடும் இடி, மின்னல், புயல் ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது Tornado உருவாகிறது. குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது இது. அப்போது சுழன்றடிக்கும் காற்று ஏதோ புயல் வடிவ மேகம்போல் காட்சிதரும்.
தமிழ்இந்து நாளிதழில் வாரந்தோறும் ஆங்கிலம் அறிவோமா என்ற தலைப்பில் திரு ஜி.எஸ் .எஸ் என்பவர் எழுதி வந்ததில் ஒரு சிலவற்றை மட்டும் நான் சேமித்திருந்தேன். அவைகளை உங்களின் பார்வைக்கு.
நன்றி
தமிழ்
இந்து
Post a Comment