Translate

சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை - 43 : கூடக்கூடாத நாட்கள்

 சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் -43
ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். 
ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. 
இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். 

பாடல் 43 : கூடக்கூடாத நாட்கள்

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோடு (உ)வாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.


(நல்லொழுக்கம் உள்ளவர்கள்) நடுப்பகலிலும், நள்ளிரவிலும், காலையிலும், மாலையிலும், திருவாதிரை நட்சத்திர நாளிலும், திருவோணம் நட்சத்திர நாளிலும், அமாவாசை நாளிலும், பௌர்ணமி நாளிலும், அஷ்டமி திதியிலும், தாம் பிறந்த நாளிலும் (தமது) துணையோடு (மனைவியோடு) உடலுறவு கொள்வதற்கு உடன்பட மாட்டார்கள்.

இந்த வாக்கியம், இந்து மத மற்றும் பாரம்பரிய இந்தியச் சமூகத்தின் சில இல்லற ஒழுக்க விதிகளைப் பட்டியலிடுகிறது. இந்த விதிகள் உடல்நலம், மன அமைதி, ஆன்மீகப் பயிற்சி மற்றும் சந்திரனின் சுழற்சியுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்..

மொத்தத்தில், இந்த விதிகள் உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்ட பண்டைய ஒழுக்க நெறிகளாகும்.

(Virtuous people) will not consent to sexual intercourse with their partner during midday, midnight, morning, and evening; on the days of Thiruvathirai and Thiruvonam stars; on New Moon (Amāvāsai) and Full Moon (Pavuṇami) days; on Ashtami thithi (lunar day); and on their own birthday.

Post a Comment

Previous Post Next Post