Translate

86 குற்றங்களை உண்டாக்கும் பகைகள்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 86குற்றங்களை உண்டாக்கும் பகைகள் 

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,

நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்

குற்றம் தரூஉம் பகை. . . . .[86]

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்: அரிய பெரிய பிணைப்பு தளர்ந்து போதல்.

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்: கற்பு என்னும் பெரிய தெப்பம் காதலால் கைவிடப்படுதல்.

நட்பின் நய நீர்மை நீங்கல்: நட்பின் இனிய தன்மை நீங்கி போதல்.

இவை மூன்றும் குற்றம் தரும் பகை: இந்த மூன்றும் குற்றம் தரும் பகை.

The loosening of a rare, great bond: The weakening of a precious, significant connection.

The abandonment of chastity, a great raft, through love: The forsaking of virtue, a strong support, due to infatuation.

The departure of the pleasant nature of friendship: The disappearance of the agreeable qualities of a friendly relationship.

These three bring about harmful enmity: These three situations lead to detrimental animosity.

உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.



Post a Comment

Previous Post Next Post