Translate

88 மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 88 மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,

தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,

பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்

புணை இல் நிலை கலக்குமாறு. . . . .[88]

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்: நோய் தன்னைத் தாக்கும்போது தான் துன்பப்படுவதும்.

தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்: அடங்காத பெரிய எமன் உயிரை உண்ணும்போதும்.

பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல்: நிலையற்ற செல்வம் ஒழுக்கமில்லாமல் நடப்பதும்.

இம் மூன்றும் புணை இல் நிலை கலக்குமாறு: இந்த மூன்றும் படகு இல்லாத நிலையில் கலங்குவது போன்றது.

When disease consumes oneself, one suffers: When illness attacks the body, it brings pain.

When the relentless, great death takes one's life: When the unstoppable, powerful death claims a life.

When unstable wealth behaves without virtue: When fleeting wealth leads to immoral conduct.

These three cause a state of turmoil like being adrift without a raft: These three situations create a state of chaos, similar to being lost at sea without a boat.

நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.



Post a Comment

Previous Post Next Post