சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 87 மூடரின் செயல்கள்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்
முழு மக்கள் ஆகற்பாலார். . . . .[87]
• கொல்வது தான அஞ்சான் வேண்டலும்: உயிர்களைக் கொல்லத் தயங்காதவன்.
• கல்விக்கு அகன்ற இனம் புகுவானும்: கல்வி அறிவு இல்லாதவர்களுடன் பழகுபவன்.
• இருந்து விழு நிதி குன்று விப்பானும்: சம்பாதிக்கும் முயற்சி இல்லாமல் இருக்கும் செல்வத்தை செலவழிப்பவன்.
• இம் மூவர் முழு மக்கள் ஆகற்பாலார்: இந்த மூன்று வகையானவர்களும் அறிவில்லாத முழு மூடர்கள்.
• One who does not fear to kill: A person who is not afraid to take lives.
• One who associates with those far removed from learning: A person who consorts with those who lack education.
• One who diminishes accumulated wealth by merely sitting: A person who squanders their wealth without making any effort.
• These three are to be considered complete fools: These three types of individuals are regarded as utter fools.
ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

Post a Comment