Translate

78 நற்றவமுடையார் செயல்கள்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 78 நற்றவமுடையார் செயல்கள்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று

வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை

மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்

தவத்தின் தருக்கினார் கோள். . . . .[78]

தூய்மை உடைமை துணிவு ஆம்: மனத்தூய்மை உடையவராய் இருத்தல் துணிவாகும்.

தொழில் அகற்று வாய்மை உடைமை வனப்பு ஆகும்: நற்செய்கையை வெளிப்படுத்தும் உண்மையுடையவனாய் இருத்தல் அழகாகும்.

தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை: தீமையை மனத்தாலும் நினைக்காமலும், வாயாலும் சொல்லாமலும் இருத்தல்.

மூன்றும் தவத்தின் தருக்கினார் கோள்: ஆகிய இம் மூன்றும் தவத்தில் பெருமை கொண்டவர்களின் கொள்கையாகும்.

"Purity of mind is courage; truthfulness that expands good deeds is beauty; not thinking or speaking evil in mind or mouth; these three are the principles of those who pride themselves in penance."

This saying states that those who possess these three qualities are the principles of those who pride themselves in penance.

தூய்மையுடையவராய் இருத்தலும், உண்மையுடையவராயிருத்தலும், தீமையைத் தருவதனை நினையாமலும், சொல்லாமலும் இருத்தலும், தவத்தார் மேற்கொண்ட கொள்கைகளாகும்.



Post a Comment

Previous Post Next Post