திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
அறிஞர் கொள்ளாத உணவுகள்
செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார். . . . .[25]
• செருக்கினால் வாழும் சிறியவன்: பெருமை மிகுந்து, தன்னைத் தானே பெரிதாகக் கருதிக் கொண்டிருக்கும் சிறிய மனிதன்.
• பைத்து அகன்ற அல்குல் விலை பகரும் ஆய்தொடி: தன் உடலை விற்கும் பரத்தை.
• நல்லவர்க்கு வைத்த அறப்புறம் கொண்டான்: நல்லவர்கள் வைத்திருக்கும் அறக்கட்டளையை அறச்சாலையை அழித்தவன். கொள்ளையடித்தவன்.
• பெருமை மிகுந்த சிறிய மனிதன், தன் உடலை விற்கும் பெண், நல்லவர்கள் வைத்திருக்கும் அறக்கட்டளையை கொள்ளையடித்தவன் ஆகிய இந்த மூவரிடமிருந்து கற்றறிந்தவர்கள் உணவு உண்ண மாட்டார்கள்.
பெரியோரை மதிக்காத அறிவில்லாதவனும், உடலை விற்கும் விலைமகளும், நல்லவர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும், ஆகிய இம்மூவரிடத்தும் அறிஞர்கள் உணவு உண்ணமாட்டார்.
Post a Comment