Translate

Web 3.0 - ஒரு சின்ன அறிமுகம்


நாம் இதுவரை செயற்கை நுண்ணறிவின் சில முயற்சிகளைப் பற்றி பார்த்தோம். கூகுளின் அடுத்தக் கட்டப் பயணம் பற்றியும் பார்த்தோம். க்ரிப்டோ கரன்சி பற்றியும் அதன் பின்னணியிலுள்ள பிளாக் செயின் டெக்னாலஜி பற்றியும் ஒரு சின்ன அறிமுகத்தை மட்டும் பார்த்தோம். அது ஒரு பெருங்கடல் அதில் ஒரு முத்துவை மட்டும் நாம் மூழ்கி கண்டெடுத்தோம். இன்னும் நிறைய முத்துகள் உள்ளன. அவைகளைப் பற்றியெல்லாம் பார்ப்பதற்கு முன் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று இந்த Web 3.0 

இது ஏதோ புதியதாக கண்டுபிடித்த ஒரு தொழில் நுட்பம் என்று நினைக்காதீர்கள். இது 2006லேயே எதிர்காலத் தேவையினைக் கருத்திற் கொண்டு இத்தொழில்நுட்பம் கண்டு பிடித்துள்ளனர். 



முதலில் நாம் Web 1.0 மற்றும் Web 2.0 இவற்றைப் பற்றி சின்னதாகப் பார்ப்போம். வலைத்தளம் அதாவது WWW (World Wide Web) என்பது 1996லேயே உபயோகத்தில் வந்துவிட்டது. முதலில் வந்த தொழில்நுட்பம் Web 1.0 எனப்படுகிறது. இது ஒன் சைடு Web என்றே சொல்லலாம். இன்னும் டெக்னிகலாக Static Page என்று சொல்வார்கள். இதில் வடிவமைக்கப்பட்ட பக்கங்களில் இருந்து நாம் அவற்றில் என்ன பதிவிட்டிருக்கிறார்களோ அவைகளை படிக்க மட்டுமே முடியும். அந்த பக்கங்களைப் படித்து அதனை பற்றிய கருத்துக்கள் இட முடியாது. கமெண்டுகள் கொடுக்க முடியாது. ஏன் Like Share என்று இப்பொழுது சொல்கிறோமே அது எதுவுமே முடியாது. அவர்கள் இட்டதை படிக்க மட்டுமே முடியும். இக்கால அரசாணைகள் போல என்றே எடுத்துக் கொள்ளலாம். 

அதையே அந்தப் பக்கத்தை படித்து அதற்கு கமெண்டுகள் கொடுத்து நாமும் சேர்ந்து பங்காற்றினால் அது Web 2.0 

இப்பொழுது நம் பழக்கத்தில் உள்ள முக்கால்வாசி Social media appம் அப்படித்தான். Facebook, Whatsapp, instagram என அனைத்து Websiteகள் மற்றும் appகள் web 2.0 டெக்னாலஜி தான் பயன்படுத்தப் படுகின்றன. இது உபயோகத்தில் வந்தது 2001ம் வருடத்தில். 

சரி நல்ல விஷயமாகத் தானே இருக்கிறது, இதில் என்ன குறை என்று நினைக்கிறீர்களா? ஆம் மிகப்பெரிய குறை உள்ளது. இதனைக் கண்டுபிடித்து உடனே 2006ல் web 3.0க்கான வழிமுறைகளை வெளியிட்டார்கள். ஆனால் அது முழுமையடைவதற்கு எட்டு ஆண்டுகள் ஆயிற்று. 


2014ல் Web 3.0 என்றால் என்ன? அதற்கு நாமெல்லாம் என்ன செய்ய வேண்டும்? அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என மிக அழகாக விவரித்து தற்போது கிரிப்டோ உலகில் முடிசூடா மன்னர்களாக இருக்கும் Etherium மற்றும் polkadot ownerகள் அதற்கான appகளையும் வெளியிட்டார்கள். 

மிகவும் காலதாமதமானதால் அதற்குள் Web 2.0 மிகப்பெரிய அளவில் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஆம் நாம் எல்லாம் ஒரு வகையில் அவைகளுக்கு அடிமையாகி விட்டோம். அவைகள் இல்லாமல் இருக்க முடியாது என்று ஆகிவிட்டது. 

சரி குறை உள்ளது என்று பார்த்தோமே, 2006ல் சின்னதாகப் பட்டது இன்று பெரிய மலையாகவே ஆகிவிட்டது. அது என்ன குறை சற்று பார்ப்போமா? 

நமக்கு ஒரு விஷயம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முன்பு நூலகம் சென்று புத்தகம் தேடிப் படிப்போம் இப்பொழுது இன்டெர்நெட் உலகில் நாம் கூகுள் சென்று Type செய்து நமக்குத் தேவையானதைத் தெரிந்துக் கொள்கிறோம். சரி நல்லது தானே புத்தகங்களுக்கு எவ்வளவு மரங்களை அழிக்கிறோம் என்று சமூக ஆர்வலர்கள் வருவார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். கூகுளில்  சென்று நாம் தேடியுவுடன் நமக்கான விடை கிடைத்ததும் அப்பாடா என்று விட்டு விடுகிறோம். இதில் தான் ஆபத்து ஆரம்பம். நாம் தேடிய ஒன்றின் மூலம் நம்முடைய தேவையை கூகுள் தெரிந்து கொள்கிறது. அது எப்படி தெரிந்து கொள்ளும் நாம் கொடுத்தது தானே. அதனை விநியோகிக்கக் கூடியவர்களிடம் நம்மைப் பற்றி அதாவது இவருக்கு இன்னஇன்ன தேவை என்று விற்று விடுகிறது. விளைவு நம் அடுத்தத் தேடலில் நாம் முன்னர் தேடியவற்றிற்கான விற்பனையாளர்கள் நம்மை அணுகுகிறார்கள். புரிந்ததா என்ன ஆபத்து என்று. நம்முடைய, நம்மைப் பற்றிய தகவல்களை நமக்குத் தெரியாமலே அனைவரிடமும் விநியோகித்து விடுகிறார்கள் அதைவைத்து காசும் பார்த்துக் கொள்கிறார்கள். இது கூகுன் மட்டுமல்ல நாம் பழக்கத்தில் வைத்திருக்கக்கூடிய அனைத்து Social Media Appகளும் பாரபட்சமின்றி இதனைச் செய்கின்றன.


மற்றொரு ஆப்பை எடுத்துக் கொள்வோம் Facebookல் reels பார்க்கிறீர்கள், ஒரு ரீல் பிடித்திருக்கிறது இரண்டாவது தடவை பார்க்கிறீர்கள் மூன்றாவது தடவையும் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்களுக்கு தொடர்ச்சியாக அதே போன்று மற்ற ரீல்ஸ்கள் காட்டப்படும் நாமும் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்போம். நடுவே Adsம் போடப்படும். இதில் அவர்கள் சம்பாதிக்கிறார்கள். புரிந்ததா? அது மட்டுமின்றி அனைத்து appகளுமே Centralised அவர்கள் இல்லையேல் தனித்து இயங்காது என்ற வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. Facebook ல் அவர்கள் விரும்பினால் நாம் எழுதியவற்றை தூக்க முடியும். நம்மை Block செய்ய முடியும். எத்தனையோ ஆண்டுகள் அவர் கஷ்டப்பட்டு எழுதியவைகளை ஒரு நொடியில் remove செய்திட முடியும். ஏனென்றால் நம் குடுமி அவர்களிடத்தில். இப்பொழுது புரிகிறதா எவ்வளவு பெரிய ஆபத்தில் உள்ளோம் என்று. 

இவற்றை சரி செய்ய உருவாக்கப் பட்டதுதான் Web 3.0. நாம் ஒரு விஷயத்தை பகிர நினைத்தால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கு மட்டும் சென்றடையும் நடுவே Facebook Storage, Google Drive Storage போன்று எதற்கும் செல்லாது encrypted ஆக இருக்கும். இது தற்போது Whatsapp ல் மட்டும் end to end encrypted ஆக உள்ளது. ஆனால் மற்ற எந்த ஆப்பிலும் எதுவும் இல்லை. மேலும் நமது தகவல்கள் யாருக்கும் பகிரப் படாது. இவையனைத்தும் முன்னர் ஒரு பதிவில் விளக்கிய Block Chain Technology மூலம் நடப்பதால் யாரும் எதையும் Hack செய்ய முடியாது.

சரி நாம் அடிமையாக இருக்கும் அனைத்து Social Media ஆப்களுக்கும் மாற்றாக ஏதாவது இருக்கிறதா என்ற உங்களின் கேள்வி புரிகிறது. எனக்கு தெரிந்த சில லிஸ்டுகளை இப்பொழுது இங்கே பகிர்ந்துள்ளேன். பாருங்கள் நன்றாக இருந்தால் உபயோகப் படுத்திப் பாருங்கள். 


Google - Presearch
GMail - DMail
YouTube - Odyssey
FaceBook - Torum
Whatsapp - Status
Spotify - Audius
Twitter - Leinster, Minds
DropBox - FileCoin
Linkedn - Indorse 
Chrome Browser - Brave Browser
PayPal - Metamask
Google Maps - HiveMapper
 
இப்படி Web3.0க்கான ஆப்கள் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. சரி இதில் உள்ள தீமை என்ன என்று பார்த்தால் அதே பிளாக் செயின் டெக்னாலஜிதான் நல்லவற்றிற்கு பயன்படுத்தும் போது அதையே கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியுமல்லவா. 


கடைசியாக இவ்வளவு வக்கனையா பேசுற நீ இதெல்லாம் உபயோகப்படுத்திருயானு கேட்டீங்கன்னா, சிலவற்றைத் தவிர அனைத்தையும் இல்லை என்ற உண்மையைத் தான் சொல்வேன். ஏன்னா நமக்கு User Friendlyயாக இல்லை என்ற ஒற்றைக் காரணம் தான். மேலும் சிலவற்றிற்கு Crypto Currency Wallet தேவை. ஆனால் இந்த நிலைமை வெகு விரைவில் மாறும். அடுத்தப் பதிவில் சந்திப்போம்.
-S.B.

Post a Comment

Previous Post Next Post