பிப்ரவரி 1908ல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது, ராஜ துரோக வழக்கு சுமத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அச்சமயத்தில், திருநெல்வேலி சென்று, வ.உ.சி.,யையும், சிவாவையும் சிறையில் சந்தித்துப் பேசினார் பாரதியார். இது சம்பந்தமாக, ஜூலை 2, 1908ல் வெளியான, தன், "இந்தியா' பத்திரிகையில் அவர் எழுதியது:
திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை
ஜெயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள அதிகாரிகள் அனுமதியின் பேரில் உள்ளே
சென்று, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ
சுப்ரமணிய சிவா இருவரையும் கண்டு பேசினேன். ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையை, முன்பு நான் தூத்துக்குடியில், அவருடைய அரிய
பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டு, புகழ்ச்சி
கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்க்கையில், அவருடைய முகம்
எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடனும் விளங்கியதோ, அதே மாதிரியே இப்போதும் இருக்கக் கண்டேன்.ஸ்ரீ சிவாவும் சந்தோஷமாகத் தான்
இருந்தார்.
ஆனால், அவர் தாடி, மீசையை
எடுத்துவிட்ட படியால், முகம் சிறிது மாறுபாடாகத் தெரிந்தது.
ஸ்ரீமான் பிள்ளையும், சிவாவும், தங்களுடைய
சொந்த காரியங் களைப் பற்றி மட்டுமே என்னோடு வார்த்தையாடாமல், உலகப் பொது விஷயங்களைப் பற்றி, வெகு உல்லாசமாகப்
பேசிக் கொண்டிருந்தனர்! "சிவாவின் முகம், சிறிது
மாறுபாடாகத் தெரிந்தது...' என்று பாரதியார் குறிப்பிட்டதை,
சிதம்பரனார் சற்று விளக்கமாகவே, தன்
சுயசரிதைப் பாடலிலே, பின்வருமாறு நகைச்சுவையாக
விவரித்துள்ளார். "தாடியை யெடுத்திடச் சாற்றிய சிவம் தான், "வாடி' என்றிடு வண்ணம்...' என்று.
அதாவது, "வாடி' என்று அழைக்கத்
தோன்றும் விதத்தில், பெண் போன்ற தோற்றத்தில் சிவா காட்சி
அளித்தார்.
***
***

Thank you Sir
ReplyDeleteOk
ReplyDeletePost a Comment