இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்பது உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமைத் தளபதியைத் தேர்வு செய்வதற்காக, நேரு தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பின் நேரு சொன்னார்... "ஆங்கில அதிகாரி ஒருவரிடம், தலைமை ராணுவத் தளபதி பொறுப்பை ஒப்படைத்து விட்டோம். ஏனென்றால், நம்மவர்களுக்கு, ராணுவத்தை நடத்திச் செல் வதற்கு போதுமான அனு பவம் கிடையாது...' என்றார். கூட்டத்திற்கு வந்த அனைவரும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், ஒரு ராணுவ அதிகாரி மட்டும், "ஐயா... ஒரு வேண்டுகோள்!' என நேருவிடம் கூறிவிட்டு, "இந்த தேசத்தை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்கு கூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவங்கள் இல்லை. ஆகையால், நம் இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக, ஓர் ஆங்கிலேயரையே நியமித்து விடலாமா?' என்றார்.
கூட்டத்தில் அதிர்ச்சியும், அமைதியும் நிலவியது. நேரு கோபப்படாமல், "இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தலைமைத் தளபதி பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' எனக் கேட்டார். ஆனால், அந்த ராணுவ அதிகாரி, "வேண்டாம்... எங்கள் உயர் அதிகாரியான லெப்டினல் ஜெனரல் கரியப்பா தான், இந்த பதவிக்கும், இங்கு உள்ளவர்களுக்கும் பொருத்தமானவர்!' என்றார். பிரதம அமைச்சரின் கருத்துக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர், லெப்டினண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர். அவர்தான், சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல்.
- "குடிமக்கள் முரசு!' சிற்றிதழிலிருந்து...
Post a Comment