மேடையில் ஈ.வெ.ரா., பேசத் துவங்கும் முன், பெயர் சூட்டுவதற்காக குழந்தைகளைக் கொடுத்தால், இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு பெயர் வைப்பார். ஒருமுறை, அப்படி கொண்டு வந்து கொடுத்த ஒருவரின் குழந்தையை, வழக்கம் போல் ஓரிரு நிமிடம் பார்த்து, "சித்தார்த்தன் என்று பெயர் சூட்டுகிறேன்...' என்றார் ஈ.வெ.ரா.,
குழந்தையின் தந்தை பதற்றத்துடன், "அய்யா... இதற்கு முன் பிறந்த என் பையனுக்கும், இதே பெயர் தான் வெச்சீங்க... இதற்கும் அதே வா....' என்றார்.
"அப்படியா?' என்ற ஈ.வெ.ரா., அவரை உற்றுப் பார்த்துவிட்டு, இது எத்தனையாவது குழந்தை?' என்று கேட்டார். வந்தவர் கூச்சத்தோடு, "இது நான்காவது...' என்றார். குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பிரசாரம் செய்து வரும் ஈ.வெ.ரா.,வுக்கு கோபம் வந்து விட்டது. "போ, போ... உனக்கெதுக்கு கறுப்புச் சட்டை...' எனக் கூறி, குழந்தையைக் கோபத்துடன் திருப்பிக் கொடுத்து விட்டார். எல்லாரும் சமாதானம் செய்த பின்னர், "பத்து ரூபாய் கொடு... இது உனக்கு அபராதம்!' என்று சொல்லி, பிறகு, "காமராஜ்' என்று பெயர் சூட்டினார்.
— திருச்சி செல்வேந்திரன் ஒரு கட்டுரையில்...
Post a Comment