அப்போது, (1970ல்) இருபது பைசா பித்தளைக் காசு ஒன்று, வட்ட வடிவில் புழக்கத்தில் இருந்தது. எட்டணா அகலத்திற்கு இருக்கும். ஒரு படக் கம்பெனி, "அன்புக்கு ஓர் அண்ணன்!' என்ற படம் தயாரித்தது. தி.மு.க., பிரமுகர் நீல நாராயணன் அதன் தயாரிப்பாளர். பாட்டெழுத கவிஞர் கண்ணதாசனை அணுகி, அவரது வீட்டிற்கு வந்தனர், மேற்படி கம்பெனியைச் சேர்ந்த இருவர்.
இருவரும், தயாரிப்பாளர் சார்பாக கவிஞரிடம் பேசிவிட்டு, அவரிடம் அட்வான்சாக, 20 பைசா நாணயம் ஒன்றைத் தந்து விட்டு சென்றனர்.
"சரிதான்... ஏதோ ராசிக்காக, இருபது பைசா நாணயத்தை அட்வான்சாக தந்தனர் போலும்!' என்று நினைத்துக் கொண்ட கவிஞரும், ஒன்றும் கேட்காமல், வாங்கிக் கொண்டார்.
"சரிதான்... ஏதோ ராசிக்காக, இருபது பைசா நாணயத்தை அட்வான்சாக தந்தனர் போலும்!' என்று நினைத்துக் கொண்ட கவிஞரும், ஒன்றும் கேட்காமல், வாங்கிக் கொண்டார்.
இசையமைப்பாளர் விஸ்வநாதனுக்கு போன் செய்து, "தம்பி... உன்னை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்ய, எனக்கு வேண்டியவர்கள் இப்போது வருவர். 20 பைசா அட்வான்ஸ் தருவர். அவர்களுக்கு அதுதான் ராசி போலிருக்கிறது. ஒன்றும் பேரம் பேசாமல் வாங்கி வைத்துக் கொள்!' என்றார். சற்று நேரத்தில், தயாரிப்பு நிர்வாகியும், பட இயக்குனரும், எம்.எஸ்.வி.,யைச் சந்தித்து பேசிவிட்டு, அவரிடம் ஒரு சவரன் (பவுன்) கொடுத்திருக் கின்றனர். உடனே எம்.எஸ்.வி., "என்ன... கவிஞருக்கு 20 பைசா அட்வான்ஸ் கொடுத்தீர்களாமே!' என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார்.
(20 பைசா காசும், சவரன் நாணயமும் ஒரே மாதிரி இருக்கும். இரண் டையும் பைக்குள் வைத்திருந்த அவர்களில் ஒருவர், தவறுதலாக, 20 பைசா காசை, சவரன் என்று நினைத்து கவிஞரிடம் கொடுத் திருக்கிறார்.)
Post a Comment