Translate

82 நல்லவர் வழிகள்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 82 நல்லவர் வழிகள்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 
இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி. . . . .[82]

சான்றாருள் சான்றான் எனப்படுதல்: அறிவாளிகளிடம் நீயும் அறிவுடையவன் என்று பெயர் வாங்குவது.
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல்: உன்னோடு நெருங்கிய பழகியவர்களிடம் செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நீயும் நெருங்கியவன் என்று பெயர் வாங்குவது.
பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை: உன்னைத் தாக்கி பேசாதவர்களிடம் நீயும் தவறான வார்த்தைகளை பேசாதிருப்பது.
இந்த மூன்று குணங்களும் நல்ல மனிதன் நடக்கும் வழிகள்.

To be recognized as wise among the wise: Gaining a reputation for wisdom among knowledgeable people.
To be considered close among those who are close: Earning the trust and affection of those you are intimate with.
Not to speak ill of those who do not attack you: Refraining from speaking negatively about those who have not wronged you.
These three qualities are the paths that a good person follows.

நற்குணங்கள் நிறைந்தவர்களால், நல்லோன் எனப்படுதலும், செல்வம் இருந்தபோதும், இல்லாதபோதும் நட்புடன் கருதப்படுதலும், தமது நற்சொல்லை ஏற்றுக் கொள்ளாதவரிடத்து சொல்லாதிருத்தலும் நல்லவர் குணங்களாகும்.


Post a Comment

Previous Post Next Post