நமது பூமாலை சேனலில் AI (செயற்கை நுண்ணறிவு) உருவாக்கிய ஒரு கதையை வெளியிட்டோம். இதை எப்படி சாத்தியமாக்கினோம் என்பதைப் பற்றி பலர் ஆர்வத்துடன் கேள்வி கேட்டதால், இந்த கட்டுரையை உருவாக்கியுள்ளோம்.
முதலில், செயற்கை நுண்ணறிவு என்பது கணினி வழி செயல்களை மட்டுமல்லாது, அவற்றை துல்லியமாக புரிந்து கொண்டு செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இது செயல்படுவதற்கு முக்கிய ஆதாரமாக நாம் ஏற்கனவே கொடுத்த டேட்டாக்கள் உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் கோடிக்கணக்கான புத்தகங்கள், கட்டுரைகள், உரையாடல்கள் ஆகியவையே இவற்றுக்கு input ஆக வழங்கப்படுகின்றன. இதன் மூலம், ஒரு வார்த்தைக்கு பின்பு வரும் வார்த்தைகளை கணிக்க மற்றும் தீர்மானிக்க இது கற்றுக்கொள்கிறது. இந்த செயல்முறையே "மிகப்பெரிய மொழி மாதிரி" (LLM) என அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி மேலும் விரிவாக பார்ப்போம்.
LLM என்பது Large Language Model தமிழில், "பெரிய மொழி மாதிரி" என்று பொருள்படும். இதன் முக்கிய வேலை நாம் கொடுக்கும் வார்த்தைகளை, அதற்கேற்ப பொருத்தமான வார்த்தைகளுடன் இணைத்து பொருளுள்ள வாக்கியங்களாக மாற்றுவது. எளிய சொற்களில் சொல்வதானால், இது ஒரு வரியில் ஆரம்பித்த வார்த்தைக்கு பொருத்தமான அடுத்த வார்த்தையை கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்வது. இதன் மூலம் அழகிய மற்றும் துல்லியமான தகவல்களை உருவாக்க முடிகிறது.
உதாரணத்திற்கு, "அவள் ஒரு லட்சியத்தாய்" என்ற சொற்றொடரை பரிசீலிக்கலாம். முதலில், "அவள்" என்ற வார்த்தையை கொடுத்தவுடன், LLM உடனே அதை ஒரு உயிரினத்தை குறிப்பதாகவும், மேலும் ஒரு பெண்ணை குறிக்கிறது என்றும் அணுகுகிறது. அதன் பின்னர், அது மனிதனாக இருக்குமா, அல்லது நாயோ பூனையோ போன்ற வேறு எந்த உயிரினமாக இருக்குமா என்ற முடிவை தேடுகிறது.
அடுத்ததாக, "ஒரு" என்ற வார்த்தையை சேர்த்தவுடன், அது ஒன்று என்ற எண்ணிக்கையை ஒப்புமையாகக் கருதுகிறது, அதாவது ஒரு உயிரினம் என்ற முடிவுக்கு வருகிறது. அதன்பின், "தாய்" என்ற வார்த்தையை சேர்க்கும்போது, அவள் குழந்தைகளின் தாய் என்றும் தாய்மையின் பண்புகளைப் பிரதிபலிப்பவளாக இருக்கிறாள் என்று LLM புரிந்து கொள்கிறது.
அதிலும், "லட்சியத்தாய்" என்றவுடன், அவள் உயர்ந்த லட்சியங்களை உடைய மனிதன் என்று விளக்கமாக முடிவெடுக்கிறது. இதற்காக, அதைத் தரவாக உள்ள கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றவற்றின் வார்த்தைத்தொகுப்புகளிலிருந்து தொடர்புகளைத் தேடுகிறது. தேவை ஏற்பட்டால் மொழி மாற்றம் செய்துக் கொள்கிறது.
மேலும், நாம் "கவிதை புனைக" என்று சேர்த்தவுடன், அது ஏற்கனவே உள்ள கவிதைகளை அணுகி, பொருத்தமானவைகளைத் தேர்வு செய்தோ, மொழிமாற்றம் செய்தோ, அல்லது புதிய வார்த்தைகளை இணைத்து நம் தேடலுக்கு ஏற்றாற்போல் தகுந்த கவிதை வரிகளை உருவாக்குகிறது.
இதே மாதிரியாக, LLM கதைகள், கட்டுரைகள், அல்லது கவிதைகளை உருவாக்குவதற்கான பலவிதமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய மற்றும் பொருத்தமான கட்டுரைகளை உருவாக்குகிறது.
சில அலுவலகங்களில் கடித பரிமாற்றம் அனைத்தும் இதனை வைத்தே செய்கின்றனர்.
இதுவே மொழி மாதிரியின் செயல்பாடும் அதனுடைய மேன்மையும். இது அனைத்து தரவுகளையும் ஒரு நொடியிலேயே கோடிக்கணக்கில் பகுத்து, அவற்றை மெய்சிலிர்க்கும் துல்லியத்துடன் ஆராய்ந்து, அதிலிருந்து உகந்த தீர்வுகளை மிகக் குறுகிய நேரத்தில் உருவாக்க முடிகிறது.
முதல் வரிக்கு வருவோம். நாம் ஏற்கனவே அதாவது 2 வருடமாக இந்த AI (செயற்கை நுண்ணறிவு) குரல் முயற்சித்து வருகிறோம். ஆனால் அதன் உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இல்லை. இப்பொழுது கொஞ்சம் நன்றாகவே சிலவற்றில் உள்ளது. அதனால் ஒரு Try செய்து பார்த்தோம். கதை புனைவதிலும் நல்ல முன்னேற்றம். Scientific Fictionகள் வேறு அளவில் நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவில் உள்ளது. அதைப் போன்று உருவாக்க நமக்கு கண்டிப்பாக வருடங்கள் ஆகலாம்.
எல்லாம் நம்மிடமிருந்தே பிறந்தது; எதுவும் வேறு எந்த கிரகத்தில் இருந்து வந்து இறங்கியதில்லை. இதை ஏற்றுக்கொள்வதா, இல்லை மறுப்பதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு. இதற்குப் பதிலாக, ஒவ்வொரு விஷயத்தையும் குறை கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், அதைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது மிக முக்கியம். இதை நல்ல வழிகளில் பயன்படுத்தி நமது திறனையும், வாய்ப்புகளையும் உயர்த்துவோம். கேட்கும் கேள்விகளுக்கு நம் திறனை வளர்த்துக் கொள்வோம்.
-S.B.
Post a Comment