சோரா ஏ ஐ
மேற்கண்ட லிங்கில் உள்ள வீடியோவை பார்த்தீர்களா. ஒருவன் யாரையோ எதிர்பார்த்து Airport வாசலில் நிற்பது போன்று இருக்கும் வீடியோ அது. அந்த காட்சியமைப்பு நன்றாகவே உள்ளது. முகபாவனைகள் அற்புதம். சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் அனைத்தும் அருமை. ஒரே விஷயம்தான் அது எதுவுமே உண்மையானது அல்ல. முழுவதும் ஒரு அப்ளிகேஷனால் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எதுவும் சாத்தியம் இந்த AI உலகில். அம்மாவைத் தவிர.....
AI அதாவது செயற்கை நுண்ணறிவு பல வகைகளில் பல விதங்களில் நமக்கு உபயோகப்படுகிறது. தற்சமயம் ஆபரேஷன் செய்வதற்குக் கூட உபயோகப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல அப்ளிகேஷன்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது. அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் இந்த open AI நிறுவனத்தின் Chat GPT.
பள்ளி பயிலும் மாணவர்களிடம் Chat GPT என்றால் என்ன? என்று கேட்டாலே பதிலளித்து விடுவார்கள்.
முன்பெல்லாம் ஆங்கிலம் தெரிந்தவருக்கு நல்ல மரியாதை. நாம் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்ப வேண்டுமென்றால் அவரிடம் தான் தயார்ப் படுத்திக் கொடுக்கச் சொல்வோம். ஆனால் தற்போது யாருடைய உதவியும் தேவையில்லை. மொபைலிலோ கனிப்பொறியிலோ க்ரோம் பிரவுசரில் Chat GPT என்ற வலைத்தளத்தில் சென்று நமக்கு வேண்டிய கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம். அதுவும் பல சட்ட நுணுக்கங்களை சேர்த்தே தரும். AI உலகில் மாபெரும் புரட்சி இது.
சரி நமக்கு வேண்டிய கடிதத்தினை பெற்றுக் கொள்ள இந்த அப்ளிகேஷனை உபயோகப் படுத்தலாம். அதேபோன்று ஒரு போட்டோ உருவாக்கவும் பிராம்ப்ட் செய்தால் போதும். அதுவே ஒரு வீடியோக் காட்சியாக கிடைக்குமென்றால் எப்படியிருக்கும்? அதாவது நாம் Text ல் பிராம்ப்ட் அடிப்பதை, அதாவது என்ன தேவை என்பதை விவரித்து அது ஒரு வீடியோவாக தந்தால் எப்படி இருக்கும். இங்கே நடிகர் நடிகைகளை வைத்து படம் செய்வதைப் போன்று. உடனே நமக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் கோச்சடையான் திரைப்படம் பற்றிய ஞாபகம் வரும் இப்படி உருவானது அல்ல அந்தப் படம். முழுவதும் அவர்கள் நேரில் நடித்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் மோஷன் கிராபிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் உருவாக்கினார்கள். ஆனால் இது வேறு. யாரும் நடிக்காமலே வெறும் நம் தரவுகளுக்கு ஏற்றாற்போல் வீடியோ வரும்.
நாம் கொடுக்கும் input (தரவுகள்) வைத்து ஒரு animated வீடியோவாக மாற்றிக் கொடுக்கும் ஒரு அப்ளிகேஷன் தான் Sora AI. AIல் முன்னணியாக இருக்கும் OpenAI நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த Sora AI. தற்சமயம் 22 செகண்டுகள் தான் Free வெர்சனில் தருகிறார்கள். கொஞ்சம் அதிகமாக வேண்டுமென்றால் காசு கட்டி வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
நாம் கொடுக்கும் தரவுகளுக்கு ஏற்றாற்போல் வீடியோ உருவாக்கித் தரும் நல்ல அப்ளிகேஷன் இந்த Sora AI. இதேப் போன்று பல அப்ளிகேஷன்கள் வந்து விட்டன. நாம்தான் மிகவும் பின்னோக்கி இருக்கிறோம். என் நண்பர் ஒருவர் புலி மீது பவனி வரும் ஐயப்பனை உருவாக்கியுள்ளார் இந்த AI உபயோகப் படுத்தி, அதற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
நல்லவற்றிற்காக பயன்படுத்துவோம். வருங்காலத்தில் ப்ராம்ப்டிங்கிற்கென தனி கோர்ஸ் வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. நம் பிள்ளைகளை அதற்கு தயார்படுத்துவோம். பயன்படுத்திப் பாருங்கள். கருத்தினை பகிருங்கள்.
- S.B.
Good explanation sir
ReplyDeleteNice. Ammavai Thavira is the highlight of this article.
ReplyDeletePost a Comment