சென்ற கட்டுரையில் கூகுளின் AI அதாவது ஜெமினியைப் பற்றி பார்த்தோம். ஓரளவிற்கு நல்ல வரவேற்புப் பெற்றிருப்பதால் கூகுள் தன் அடுத்தக் கட்ட முயற்சியினை எட்டியுள்ளது. ஜெமினி 2.0 வெளி வந்துவிட்டது. இன்னும் நிறைய ஆப்ஷன்களுடன். ஜெமினி 2.0-ன் வெளியீடு, கூகுளின் AI திறன்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நன்கு எடுத்துரைக்கிறது. இன்னும் மேம்படுத்தப்பட்ட திறன்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட செயல்பாடுகளுடன், ஜெமினி 2.0, AI உலகில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கிறது.
அதற்குள் அடுத்த அறிவிப்பு இது official அறிவிப்பா அல்லது கிசுகிசுவா எனத் தெரியவில்லை.
கூகுள் தேடலின் முகப்புப் பக்கத்தை AI-யால் இயக்கி, பயனர்களின் தேடல் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. நாம் ஒவ்வொரு தடவையும் google.com என்று Type செய்யும் போது முகப்புப் பக்கமாக ஒரு பக்கம் வருமல்லவா அந்தப் பக்கத்தையே ஏன் AI பக்கமாக மாற்றக் கூடாது என்று அதற்கான வேலைகள் நடக்கிறதாம். இதன் மூலம், பயனர்கள் தங்கள் தேடல்களை இன்னும் துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும்.
கூகுள் க்ரோமில் ஏதாவது மேலே சர்ச் செய்தபின் All, images, video, maps, என்று Categoryக்கள் வருமல்லவா அதனை AI முறையில் மேம்படுத்தி இடது பக்க ஓரமாகவே வைத்து மேலும் இந்தத் தேடலை AIஐ வைத்துத் தேட வேண்டுமா என்று ஒரு கேள்வியும் கேட்டு நம்மை AI பயன்படுத்த எளிமையாக்குவதாக திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கென்று தனியாக நாம் எதுவும் install செய்யத் தேவையில்லை. இது சமீபத்தில் Search ஆப்ஷனுடன் கொடுத்து update ஆன ChatGPTக்கு போட்டியாக என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
AI, நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் புகுந்து, நம் வாழ்க்கை முறையை மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. கூகுள் போன்ற நிறுவனங்கள், AI தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, அதை நம் அனைவரின் நன்மைக்காக பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆக ஆக.... நல்லது நடந்தால் சந்தோஷம் தான்.
-S.B.
Post a Comment