Translate

ஜெமினி.......

ஜெமினி என்றொரு திரைப்படம் விக்ரம் நடித்தது. அதில் ஒரு காட்சியில் வில்லன் கலாபவன் மணி ஜெமினி’........ என்று கத்துவார் அதே நிலைமையில் தான் உள்ளனர் OpenAI மற்றும் மைக்ரோசாப்டின் Copilotம். 

ஆம் வந்துவிட்டது Googleன் Gemini AI. இதற்கென்று  கம்ப்யூட்டரோ  ipad தேவையில்லை. நம் கையில் உள்ள ஒரு latest Android மொபைல் போதும். 


iphoneக்கு எப்படி Siri என்ற app இருக்கிறதோ அதே போன்று android Phoneக்கென Google Assistant என்று ஒன்று இருந்தது. இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டுதானிருந்தன. எப்பொழுது OpenAI ChatGPT என்று வந்ததோ சண்டையிட்டுக் கொண்டு இருந்த இரண்டும் விழித்துக் கொண்டன.  இதில் iPhone ஒரு படி மேலே போய் Chat GPTஐயே தன்னுடைய Siriஉடன் சேர்த்துக் கொண்டது. ஆம் தற்பொழுது iphone 16ல் அது இணைக்கப்பட்டுவிட்டது. ஆனால் Google தன்னுடைய Google assistant app தனக்கே உரித்தான Google Search உடன் சேர்த்து உருவாக்கி, தான் இதில் வேறு மாதிரி என்று நெத்தியலடித்து விட்டது இந்த Gemini. 

ஏன் அவர்கள் கத்துகிறார்கள் என்று புரிகிறதா? 



கூகுளின் சிறப்பே அதன் தேடுபொறி அதாவது Search engine தான். நாம் பொதுவாக ஏதாவது ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே Google ல் தேடுவோம் அதற்கேற்றார்  போல் தேடியவை மற்றும் வேறு சில ஆப்ஷன்களும் கிடைக்கும். அதுவும் விலை இல்லாமல். இது உண்மையில் ஒரு பெரிய விஷயம் யாரிடமும் இல்லாத ஒன்று. ஏனெனில் Google இத்தனை ஆண்டு காலமாக நம் வலைத்தளங்கள் அனைத்தையும் ஒவ்வொரு பக்கமாக index செய்து அதில் உள்ள முக்கிய அம்சங்களை அதன் Search bot க்குள் Collect செய்து வைத்துள்ளது இன்னமும் செய்து கொண்டுதானிருக்கிறது. அதுதான் இந்த ஜெமினியின் பலம்.

முன்னர் அதாவது ஒரு வருட காலத்திற்கும் மேலாக BARD என்ற AI ChatBOTஐ உருவாக்கி அதனை பயன்படுத்தி அதன் மேம்படுத்தப்பட்ட ஒரு APPஆக தான் உள்ளது இந்த ஜெமினி. இதற்கென்று தனியாக account ஆரம்பிக்கத் தேவையில்லை நம் பழக்கத்தில் உள்ள Gmail போதும்.
 
நீங்கள் Gemini உங்களுக்கு ஏற்றாற்போல் பழக்கலாம். எப்படியெனில் நாம் ஒவ்வொரு தேடலை செய்யும் போதும் அது நம்மை பற்றியும் நம் தேடல் பற்றியும் சேர்த்துக் கொண்டே போகும். நம் தேவை என்ன என்பதை அதற்கு Feed செய்து கொண்டேயிருப்பதன் மூலம் சாத்தியப்படுகிறது. அதனுடன் உரையாடலாம். கதை சொல்ல சொல்லலாம் கவிதை எழுத சொல்லலாம். நம் உரையாடல்களை எழுத்து வடிவிலும் வைத்துக் கொள்ளலாம். 

இந்தப் பதிவு வருவதற்கு முன் ஜெமினி 2.0 வெளி வரலாம்... அது இன்னமும் மேம்படுத்தப் பட்டது. நம்முடன் பேசும்போது நம் குரலையே அது உள்வாங்கி அதன் குரலாக மாற்றக்கூடிய வசதியுடன் வரப் போகிறது.

எழுத்தாளர்
சுஜாதா அவர்கள் ஒரு நூல் எழுதினார் அதன் பெயர், கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு 1963லிருந்து 1972 வரை பல்வேறு எழுத்து முறையில் அவர் படைத்த கதைத் தொகுப்பு அனைத்தும் அறிவியல் சம்பந்தப்பட்டதுதான். அந்த நூலின் தலைப்புதான் இப்பொழுது சரியானது. 

வருங்காலத்தில் Gemini ஒரு கதை சொல்லு என்று நம் குழந்தைகள் தூங்கும் முன் கேட்டாலும் அதற்கு Gemini கதை சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 
செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம்.

-S.B.

Post a Comment

Previous Post Next Post