ஒரு சமயம், இங்கிலாந்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. இயேசு கிறிஸ்து, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியளித்ததை பொருளாகக் கொண்டு, கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. போட்டியில் பலர் கலந்து கொண்டனர். ஜான்பன்யன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர், அப் போது சிறுவனாக இருந்தார்; அவரும், அதில் கலந்து கொண்டார். எல்லாரும் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளினர்.
ஆனால், பன்யன் மட்டும், ஒன்றுமே எழுதாமல், ஏதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தார். கடைசி வரையிலும், ஒரு எழுத்து கூட தாளில் பதிவாகவில்லை. "இன்னும் இரண்டு நிமிடம் உண்டு, அதன் பிறகு யாரும் எழுதக் கூடாது...' என்று அறிவித்தனர். அப்போது தான், அவருக்கு எழுத வேண்டுமென்று தோன்றியது.
உடனே, "தண்ணீர் தன் நாதனைக் கண்டு நாணத்தால் சிவந்தது...' என, ஒரு கவிதை வரியைத் தாளிலே எழுதி கொடுத்தார். அவருக்கு தான் பரிசு கிடைத்தது. அந்த கவிதை வரி, எத்தனையோ செய்திகளை, உணர்ச்சி களைச் சொல்லாமல், சொல்லி விட்டது. அதனால்தான், நாம் கவிதைக்கு அத்தனை உயர்வு கொடுக்கிறோம்.

Good
ReplyDeletePost a Comment