தன் பள்ளி ஆசிரியர்களுள், இன்றும் அழ.வள்ளியப்பாவின் நினைவில் நிற்பவர், கணக்கு வாத்தியார் ராஜகோபால ஐயர். சரியாகக் கணக்கு போடாத மாணவனைப் பார்த்து, "திருவிழாவில் தீவட்டி பிடிக்கத்தான் நீ லாயக்கு...' என்று திட்டுவார். <உடனே, தன் திட்டுக்குத் தாமே ஒரு விளக்கம் கூறுவார். "தீ வட்டி பிடிக்கவும், சிறிது மூளை வேண்டும். தீவட்டியைச் சாய்த்து பிடிக்க வேண்டும். நேராகப் பிடித்தால், அதன் தலைப் பகுதியிலிருந்து எண்ணெய் வழியும். நீ அதுக்கும் லாயக் கில்லை...' என்று கூறுவார்.
மாணவர்கள் கணக்கு போடும்போது, சில சமயம் பாதி வரை போடுவர். மேலே முடிக்கத் தெரியாமல் அப்படியே விட்டு விடுவர். கணக்கு நோட்டைத் திருத்தும் போதும், இப்படிப்பட்ட பாதி கணக்குகளைக் கண்டால், அதைப் போட்ட மாணவனை எழுப்பி, "என்ன... புது மாப்பிள்ளை சாப்பிட்ட மாதிரி கணக்குப் போடறே?' என்று கேட்பார்.
புது மாப்பிள்ளை, கூச்சத்தாலும், தன்னை சாப்பாட்டு ராமன் என்று மற்றவர் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தாலும், விருந்து சாப்பிடும் போது, காய்கறி முதலிய அனைத்திலும், பாதி பாதிதான் சாப்பிடுவான். இதை மனதில் வைத்தே, ஆசிரியர் அவ்விதம் சொல்வார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு நூலில், குழந்தைகள் எழுத்தாளர் பூவண்ணன். **
Post a Comment