Translate

என்னது.... பல் தேய்க்கும் பிரஷ்ஷின் விலை ரூபாய் 25ஆயிரமா?


படத்தில் காணப்படும் பொருள் ஒரு Tooth brush என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் செயற்கை நுண்ணறிவினால் செய்யப்பட்டுள்ள பல் தேய்க்க உதவும் ஒரு Tooth Brush. செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்டம். 

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பல் விளக்க கைகளை முகத்தை அசைக்க வேண்டாம். இந்த பிரஷை வாயில் வைத்ததும் தானாகவே பற்களை ஸ்கேன் செய்து அழுக்கு, காரை மற்றும் கறைகளை தானாகவே சுத்தம் செய்து விடும். அதுவும் மிகக் குறைந்த நேரத்தில். ஒருவருக்கு அவர் பல் முழுவதும் சுத்தம் செய்ய 20 செகண்டுகள் என்ற வேகத்தில். 

இதனுள் மொத்தம் எத்தனை சிறு குச்சிகள் உள்ளது தெரியுமா? கொஞ்சம் தலை சுற்றிப் போகும் இருந்தாலும் தெரிந்து கொள்வோம். மொத்தம் 18000 சிறு குச்சிகள் இதனுள் அடக்கம் மற்றும் உள்ளே ஒரு கேமராவும் உள்ளது. 

இது உண்மையில் யாருக்கு உருவாக்கப் பட்டதென்றால் கைகால்கள் அசைவின்றி பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முழுவதும் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். 


சரி இவ்வளவு நல்ல பொருள் விலையென்ன தெரிந்து கொள்ளலாமா அதிகமில்லை 299 US Dollar அதாவது நம்மூர் மதிப்பின்படி சற்றேறக்குறைய 25000 ரூபாய் தான். செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்டம்

சரி வாயை பிளந்தது போதும் அடுத்ததைப் பார்க்கலாம். 

-S.B.

1 Comments

Post a Comment

Previous Post Next Post