Translate

ஆங்கிலம் அறிவோமே 27 அது முன்னாலே போனால், இது பின்னாலே வருமா?

 ஆங்கிலம் அறிவோமே 27 அது முன்னாலே போனால், இது பின்னாலே வருமா?
கேட்டாரே ஒரு கேள்வி
Advice, advise இரண்டில் எதை எங்கே பயன்படுத்துவது என்பதில் குழப்பம் தாங்கவில்லை. கொஞ்சம் advice அல்லது advise பண்ணுங்களேன். 
***************
Advice என்பது பெயர்ச்சொல் (noun).
1. Listen to my advice.
2. Advices from elders are always good.
Advise என்பது வினைச் சொல் (verb).
I advise you not to go.
He was advised to take rest.
கொஞ்சம் advice செய்யுங்களேன் என்பதை please advise என்று எழுத வேண்டும். 
***************
உங்களை யாரோ தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்போது நீங்கள் "Get off my back”என்று கூறலாம். இது அவ்வளவு நாகரிகமான வாக்கியமல்ல என்றாலும் எரிச்சலின் உச்சத்தில் நாம் இப்படிக் கூற வாய்ப்பு உண்டு. 
நீங்கள் பாராட்டும்படியான ஒரு சாதனையைச் செய்திருந்தால், you deserve a pat on the back. 
சிலபேர் உங்களைப் பற்றி நீங்கள் இல்லாதபோது விமர்சிப்பார்கள். They are talking behind your back. அதுபற்றிக் கவலைப்படாதீர்கள். 
"You scratch my back and I will scratch yours” என்றால் நீங்கள் இதைச் செய்தால் நான் அதைச் செய்வேன் எனும்படியான பேரம். 
மிகவும் கஷ்டமான (முக்கியமாக நிதிநிலை தொடர்பாக) சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘’You have backs to the wall’’. 
சிலருக்கு ஆழமான கவலை என்று எதுவும் இருக்காது. ஆனால் ஏதோ சின்ன மன அழுத்தம் அவர்களுக்கு இருக்கக் கூடும். அப்போது, A small worry remains in the back of their minds. 
விமர்சனங்கள் சிலரை சிறிதும் பாதிக்காது. To them criticism is like “Water off a duck’s back”. 
ஏதாவது முக்கிய நிகழ்வில் உங்களுக்குக் குறிப்பிட்ட பங்கு எதுவும் இல்லையென்றால் ‘’you take a back seat’’. 

பிரபல ஆங்கில தொலைக்காட்சித் தொடரான ‘House of Cards’ என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதன் வசனத்தில் இடம் பெற்ற ‘Six degrees of separation’ என்ற சுவாரசியத்தைக் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
‘’உலகிலுள்ள யாராக இருந்தாலும் அவர் வேறு எவருடனும் ஆறே இணைப்புகளின் மூலமாக மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் அது. 
‘’என் நண்பனின் சித்தியான..’’, ‘’என் பாஸின் மைத்துனரின்” என்பதுபோல ஆறுவித இணைப்புகள் மூலம் யாரை வேண்டுமானாலும் தொட்டுவிடலாம் என்பதுதான் இதன் பொருள். 
இதை முதலில் உருவாக்கியவர் ஹங்கேரியைச் சேர்ந்த ஒர் எழுத்தாளர். அவரது சிறுகதை ஒன்றில் இதை அவர் குறிப்பிட, அது உலகப்புகழ் பெற்றுவிட்டது. 
***************
 “என் மகனின் பள்ளிக்கூடத்தில் ’’ ‘i’ before ‘e’ except after ‘c’ என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இது எனக்குக் குழப்பத்தைத் தருகிறது’’ என்று கூறுகிறார் ஒரு வாசகர். 
 இது ஸ்பெல்லிங் குழப்பத்தைத் தீர்க்க உதவும் ஒரு வாக்கியம். I, e ஆகிய எழுத்துகள் அடுத்தடுத்து இடம் பெறும் வார்த்தைகளில் முதலில் ‘i’ வருமா அல்லது ‘e’ வருமா என்பதில் குழப்பம் எற்படக் கூடும். அதாவது “எது சரி? Believe என்பதை beleive என்பதா? நண்பன் என்பதை Friend என்று எழுதலாமா அல்லது Freind என்று எழுத வேண்டுமா?’’ 
 இப்படிச் சந்தேகம் வரும்போது முதலில் ‘i’க்குப் பிறகு ‘e’ (அதாவது ‘i’ before ‘e’) என்று சொல்லலாம். கீழே உள்ள வார்த்தைகளில் ‘i’க்குப் பிறகு ‘e’ வருகிறது என்பதைக் கவனியுங்கள். 
 Believe Thief 
 Brief Relieve
 Chief Yield 
 Diesel Hygiene 
 Grief Fierce
 Field Friend 
 Piece Achieve 
 அதே சமயம் ’c’ என்ற எழுத்துக்குப் பிறகு இந்த இரு எழுத்துகளும் வர வேண்டும் என்றால் முதலில் ‘e’ அடுத்து ‘i’ என்று இருக்க வேண்டும். 
 Receive
Ceiling 
 Receipt
 இது பொது விதி. ஆனால் விதிவிலக்கான வார்த்தைகள் கணிசமாகவே உள்ளன.. Science, sufficient, seize, vein, foreign போன்றவை. 
***************
“In the red’’ என்றால் அபாயம் என்றுதானே அர்த்தம்? என்று கேட்டிருக்கும் வாசகருக்கு இதுதான் விடை. 
வண்ணங்களைப் பொருத்தவரை கலாச்சாரங்கள் மாறுபடுகின்றன. ’In the red’ என்பதை அபாயமாகத்தான் புரிந்து கொள்கிறோம். கடும் நிதி நெருக்கடியையும் இப்படிக் குறிக்க முடியும். ஆனால் சீனாவைப் பொருத்தவரை red என்பது மிகவும் ஆரோக்கியமான நிலையைக் குறிக்கிறது - நிதி நிலை உட்பட. அவர்கள் ‘in the red’ என்பதை வழக்கமான பொருளில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 
இந்தியாவிலேகூட சில பகுதிகள் வெள்ளையை அமங்கலமாகக் கருத, வேறு சில பகுதிகள் கறுப்பு நிறத்தை அமங்கலமாகக் கருதுகின்றன இல்லையா? 
***************
தொடக்கம் இப்படித்தான்
Freelance என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘I am a Freelance Reporter” என்று ஒருவர் கூறினால் அவர் எந்தப் பத்திரிகையின் ஊழியரும் அல்ல. அவருக்கு மாத அல்லது வார ஊதியம் என்று எந்த இதழும் பணம் அளிப்பதில்லை” என்று பொருள். ‘’I am a freelance Trainer” என்று ஒருவர் குறிப்பிட்டால் அவருக்கு எந்த நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் சுதந்திரம் உள்ளது என்று பொருள். 
ஆனால் Freelance என்ற வார்த்தையின் பின்னணி போர் தொடர்பானது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை mercenaries என்ற பிரிவினர் இருந்தனர். அதாவது கூலிப்படையினர் எனலாம். இவர்கள் தேசப்பற்று என்ற எல்லைக்குள் தங்களை சுருக்கிக் கொள்ள மாட்டார்கள். எந்த அணி தங்களுக்கு அதிகப் பணம் கொடுக்கிறதோ அவர்கள் சார்பாகப் போர் புரிவார்கள். இவர்களை ‘’Freelance”என்று அழைத்தனர். 
 இந்தியர்களில் ஒரு பிரிவினர்கூட அலெக்ஸாண்டரின் படையில் இப்படி சேர்ந்து கொண்டனர். இந்திய அரசர்களுக்கெதிராகவும் போரிட்டனர்.

 சிப்ஸ்
*வயிற்றுக்கு நடுவே ஒரு குழி இருக்கிறதே அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
 Belly button 
* Nominal help என்றால்?
 குறைந்தபட்ச உதவி - meagre help. 
* Fertile என்பதற்கு எதிர்ச்சொல் என்ன?
 Barren

தமிழ்இந்து நாளிதழில் வாரந்தோறும் ஆங்கிலம் அறிவோமா என்ற தலைப்பில் திரு ஜி.எஸ் .எஸ் என்பவர் எழுதி வந்ததில் ஒரு சிலவற்றை மட்டும் நான் சேமித்திருந்தேன். அவைகளை உங்களின் பார்வைக்கு.
 நன்றி தமிழ் இந்து

Post a Comment

Previous Post Next Post