திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்
எண்ணின், தெரியாப் பொருள். . . . .[53]
"குருடன் மனையாள் அழகும்" - பார்வையற்றவன் தன் மனைவியின் அழகைப் பற்றி பேசுவதும்
"இருள் தீர கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும்" - அறிவில்லாதவன் கல்வி கற்றதாக பெருமையுடன் பேசுவதும்
"பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும்" - இசையின் நுணுக்கம் தெரியாதவன் யாழின் இசையை ரசிப்பதாக சொல்வதும்
"இம் மூன்றும் எண்ணின், தெரியாப் பொருள்" - இந்த மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் பொருளற்றவை/அர்த்தமற்றவை
அனுபவம் இல்லாமல் எதையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. தகுதி இல்லாதவர்கள் தாங்கள் அறிந்ததாக பேசுவது வீண். ஒரு விஷயத்தை உண்மையாக புரிந்து கொள்ள அதற்கான அடிப்படை திறன் தேவை , போலி அறிவும், பொய்யான பெருமையும் கொள்ளக்கூடாது.
குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.
This verse highlights the importance of genuine understanding and experience, warning against superficiality and pretense:
"The blind man talking about his wife's beauty" - This refers to someone who lacks the ability to truly perceive or appreciate something, yet speaks about it as if they have full knowledge.
"The ignorant person boasting about their learning, speaking wildly to dispel darkness" - This refers to someone who has acquired some knowledge but lacks true wisdom or understanding, yet speaks pretentiously as if they are an expert.
"The one who doesn't understand musical nuances claiming to enjoy the music of the lute" - This refers to someone who lacks the skills or knowledge to truly appreciate something, yet pretends to enjoy it or understand its complexities.
"These three, when considered, are meaningless things" - This concludes by stating that these three scenarios are ultimately empty and lack substance, emphasizing the importance of genuine understanding and experience in all aspects of life.
Post a Comment