Translate

திரிகடுகம் 26. உயர்ந்தவர் எனப்படுபவர்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்

கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்

சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர்

ஞாலம் எனப் படுவார். . . . .[26]

ஒல்வது அறியும் விருந்தினன்: விருந்தோம்பலை அறிந்த விருந்தினர்.

ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வான்: வேட்டையாடலை விட்டு விலகி வாழ்பவர்.

வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசான்: மிகுந்த நல்லொழுக்கம் கொண்ட ஆசான்.

விருந்தோம்பலை அறிந்த விருந்தினர், வேட்டையாடலை விட்டு விலகி வாழ்பவர், மிகுந்த நல்லொழுக்கம் கொண்ட ஆசான் ஆகிய மூவரும் உலகத்திற்கு நல்லவர்கள் என்று போற்றப்படுவார்கள்.

நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார்.



1 Comments

Post a Comment

Previous Post Next Post