இந்தியாவில் AI துறையில் சாதிக்கும் சில முன்னணி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சாதனைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போமா...
1. Niramai
Niramai என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகவும் எளிதான மற்றும் துல்லியமான AI தொழில்நுட்பத்தின் அடிப்படையாக வைத்து ஆராய்ச்சிகள் செய்கின்ற ஒரு நிறுவனம் ஆகும். இது, Breast Cancer (மார்பக புற்றுநோய்) முன்கூட்டியே கண்டறிவதில் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனம் Thermal Image Analysis மற்றும் Artificial Intelligence இவைகளை பயன்படுத்தி மாற்பக புற்றுநோயை சரியான முறையில் கணிக்க உதவும் சாதனங்களை உருவாக்கியுள்ளது. AI மூலம், இது மிகவும் குறைந்த செலவில் மற்றும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் early-stage breast cancerஐ கண்டுபிடிக்க உதவுகிறது. நல்ல முன்னேற்றம் தானே. அதற்கான லிங்க் https://www.niramai.com/
2. Qure.ai
Qure.ai, செயற்கை நுண்ணறிவின் பயன்முறைகளை மருத்துவ துறையில் பயன்படுத்தி, மருத்துவ படங்களை (நோயாளர்களின் சிடி ஸ்கேன், எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ படங்கள்) போன்றவற்றை துல்லியமாகப் பரிசோதித்து முடிவுகளை வழங்குகிறது. அவர்கள் உருவாக்கிய AI மாடல்கள், brain hemorrhage (மூளை இரத்த கசிவு), tuberculosis (காச நோய்) போன்ற நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை சில நிமிடங்களில் கண்டறிந்து மருத்துவர்களுக்கு உதவுவதாகவுள்ளது. அதற்கான லிங்க் https://www.qure.ai/
3. SigTuple
SigTuple என்பது மைக்ரோஸ்கோப் மருத்துவ படங்களின் மூலம் உடல் நிலையை ஆய்வு செய்யும் ஒரு AI ஸ்டார்ட்-அப் ஆகும். இதில் உள்ள AI-powered diagnostic tools நம் இரத்த மாதிரிகளை பகுத்து ஒவ்வொரு செல் வடிவத்திலும் அந்த இரத்தத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களை மைக்ரோஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை மருத்துவர்களுக்கு வழங்கி நல்ல தீர்வுகளை வழங்குகின்றன. SigTuple அனைத்து வகையான பரிசோதனைகளையும் (blood, urine, stool, etc.) தொடர்ந்து ஆராய்ந்து, முடிவுகளை மிக விரைவாகவும் துல்லியமாகவும் வழங்குகிறது. அதன் மூலம் நோயின் வீர்யத்தை அறிந்துக் கொள்ளலாம். அதற்கான லிங்க் https://www.sigtuple.com/
4. HealthifyMe
HealthifyMe என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான AI-powered health and fitness application ஆகும். இது, பயனர்களின் உடல் எடை மற்றும் BMI கணக்கிட்டு, அவர்களுக்கான சரியான வைட்டமின் ஊட்டச்சத்துக்களை, உடற்பயிற்சி திட்டங்களை மற்றும் நல்வாழ்வு முறைகளை பரிந்துரைக்கின்றது. AI-உடன் பயனரின் நிலையை கணித்து அந்த முறையில் தயாரிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதால், பயனர்கள் பருமனாக இருந்தால் அதிக எடை குறைக்க மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை செயல்படுத்த முடிகின்றது. அதற்கான லிங்க் https://www.healthifyme.com/in/
5. Butterfly Network
Butterfly Network ஒரு நிறுவனம், இது AI தொழில்நுட்பத்தின் மூலம் portable ultrasound devices உருவாக்கி, உலகெங்கும் மருத்துவ சேவைகளை அளிக்கும் ஒரு நிறுவனம். இது, மக்களுக்குக் குறைந்த விலைக்கு ஸ்கேன் செய்வதை வழங்குவது மட்டுமல்லாமல் மிகவும் துல்லியமான ஆராய்ச்சி முடிவுகளை வழங்குகிறது. மருத்துவர்கள் இவற்றை பயன்படுத்தி, நோய்களின் அடையாளங்களை, அவற்றின் தீவிரத்தை மிக எளிதாகக் கண்டறிய முடிகின்றது. அதற்கான லிங்க் https://www.butterflynetwork.com/int/en-in/
6. Tricog Health
Tricog Health என்பது AI தொழில்நுட்பத்தினால் மருத்துவமனையில் எடுக்கப்படும் ECGக்களை ஆராய்ந்து, இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, உடனடியாக எடுக்க வேண்டிய தீவிர சிகிச்சையை அருகில் உள்ள பெரிய மருத்துவமனை மற்றும் அதற்கான தீர்வுகளை உடனடியாக அளிக்கும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கும் நோக்கத்தில், நோயாளிகளுக்கு மிக விரைவான, துல்லியமான அறிகுறிகளை வழங்குகின்றது. அதற்கான லிங்க் https://www.tricog.com/
இந்தியாவில் AI வழியில், மருத்துவத் துறையில் சாதிக்கும் இந்த நிறுவனங்கள் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளன. இவை மட்டுமல்ல ஏகப்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளோடு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துவதற்கு முனைந்துள்ளன. இந்த 6 நிறுவனங்களும் Chat GPTயில் search செய்தபோது கொடுக்கப்பட்டவை.
செயற்கை நுண்ணறிவு மருத்துவத்துறை இணைவதன் மூலம் நோய்கள் முன்கூட்டியே கண்டறியப்படுவதோடு, மருத்துவர்களுக்கான தீர்வுகள் மேம்பட்டுள்ளன. அதனால், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதார துறைகள் AI தொழில்நுட்பங்களை தங்கள் செயல்பாடுகளுக்கு இணைத்து, நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை திறம்பட வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி, உலகளாவியத் மருத்துவத்தை, அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள ஊராட்சி மற்றும் நகரம் சார்ந்த பகுதிகளிலும், மேம்படுத்தப் போகிறது. முன் ஒரு கட்டுரையில் இந்த AI தொழில்நுட்பம் நல்ல வழியில் பயன்பட வேண்டும் என்றோம். அது நடக்கப்போகிறது.
-S.B.
Post a Comment