Translate

39. GDS தோழர்களுக்கான இடம் மாறுதல் உத்தரவு குறித்த சமீபத்திய விளக்க ஆணை கூறுவது என்ன?? --- 3

Team’s Daily Bytes 

By Com A.Kesavan, Asst General Secretary

GDS தோழர்களுக்கான இடம் மாறுதல் உத்தரவு குறித்த சமீபத்திய  விளக்க ஆணை கூறுவது என்ன??   --- 3

Dte. Lr. No. 17-31/2016- GDS   Pt.i dtd 10.10.2024

1. பணியிட மாறுதலில் ஜிடிஎஸ் ஊழியர் விண்ணப்பிக்க ஏதுவாக காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த சம்பள விவரங்கள் குறிப்பிடப்படும்.

2. பணியிட மாறுதல் விண்ணப்பித்து வருகின்ற ஜிடிஎஸ் ஊழியர்களுடைய விண்ணப்பங்களை அந்தந்த கோட்ட அதிகாரி சரி பார்ப்பார் .

3. பொதுவாக ஜிடிஎஸ் ஊழியர் விண்ணப்பம் நிராகரிப்பதற்கு கீழே குறிப்பிட்ட காரணங்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

a. குறைந்தபட்ச 2 வருடம் பணி பூர்த்தி செய்யாமை. 
b.. ஏற்கனவே 2 /  3 இடம் மாறுதல் வாய்ப்புகளை பயன்படுத்தியது.
c.  டி ஆர் சி ஏ பொருந்தாமை .
d. நிலுவையில் உள்ள குற்ற/  வழக்கு பின்னணிகள்.
e.  ஜீடிஎஸ் ஊழியருடைய சான்றிதழ் சரிபார்ப்பு தாமதம்.
f.  கணவன் மனைவி Spouse category விண்ணப்பித்திருந்தால் அதற்குரிய படிவத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது .
g.ஒரு பணியிட மாறுதலுக்கும் இரண்டாவது பணியிட மாறுதலுக்கும் உரிய குறைந்தபட்ச ஒரு வருட இடைவெளி இல்லாமல் இருத்தல்.
h. ஏற்கனவே நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டு இருத்தல்.
i. தண்டனை/ வழக்கு பின்னணி தாமதம்.
j. ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனை காலம் முடியாமல் இருத்தல்.

4. GDS ஊழியருடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது குறித்த தகவல்கள் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

5.உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் CEPT மூலம் on-line வெளியிடப்படும்.

6. சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரி இடமாறுதல் உத்தரவை வழங்கிடுவார் .

7. புதிய பணியில் சேர்வதற்கு இலாகா வழங்குகின்ற குறிப்பிட்ட நாளுக்குள் சென்று இணைந்திட வேண்டும் .

8.பணியில் சென்று இணைந்த ஜிடிஎஸ் ஊழியர் குறித்த விவரங்கள் மீண்டும் ஆன்லைன் போர்டலில்  கோட்ட அதிகாரிகள் மூலம் பூர்த்தி செய்யப்படும்


Post a Comment

Previous Post Next Post