சின்ன கோடு, பெரிய கோடு!
எந்த வார்த்தையில் q இடம்பெற்றாலும் அதைத்
தொடர்ந்து u
என்ற
எழுத்தும் இடம்பெறுவது வழக்கம். Queen,
quit, queue, quantity, quality.
ஆனால் q வைத் தொடர்ந்து u அல்லாத வேறொரு எழுத்து
இடம்பெறும் வார்த்தைகளும் உண்டு. எடுத்துக்காட்டு QWERTY. கணினியின் key board-ஐ இந்த வார்த்தை
குறிக்கிறது. எதனால் இந்தப் பெயர் என்பதைக் கொஞ்சம் யோசித்தால் உங்களால்
கண்டுபிடித்துவிட முடியும்.
முஸ்லிம் மக்களுக்கான
நீதிபதியை Qadi
என்பார்கள்.
இந்து அல்லது முஸ்லிம் சாமியார்களை Faqir என்றோ, Fakir என்றோ குறிப்பிடுவதுண்டு. Qindar என்பது அல்பேனியா
நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த ஒரு நாணயம். குறைவான மதிப்பு கொண்டது.
Qwerty என்ற எழுத்துகளைக்
கொஞ்சம் கவனித்தால் அவை கணினி அல்லது தட்டச்சு விசைப்பலகையின் (keyboard) மேல் வரிசையில்
இடப்புறமாக அடுத்தடுத்து அமைந்த எழுத்துகள் என்பது தெரியவரும். அதனால்தான் அதற்கு
அந்தப் பெயர்.
Chord - Cord -
Cored
ஒரு வளைவின் இர ண்டு புள்ளிகளை
இணைக்கும் நேர்கோட்டை chord
என்பார்கள்.
இசைப் பிரிவில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மியூசிக் டோன்களை ஒலிக்க
விடுவதையும் chord
என்பார்கள்.
Cord என்பது கயிறு. அதேபோல
நன்கு வளையக்கூடிய எந்தப் பொருளையும்கூட cord என்பார்கள்.
ஒன் றின் மையப் பகுதியை
நீக்குவதை cored
என்பதுண்டு.
“En dash, Em dash என்றெல்லாம்
கேள்விப்படுகிறேனே. இவை என்ன?’’
என்று
கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.
Hyphen என்பது சிறு கோடு. Eye - opener என்பதில் இருப்பதை ப்
போல.
En dash என்பது hyphen-ஐவிட அளவில் சற்று
நீளமான ஒரு கோடு. ‘n’
என்ற
எழுத்தின் அளவு அகலம் கொண்ட கோடு என்பது ஐதீகம்! கால அளவைக் குறிக்கும்போது இதை முக்கியமாகப்
பயன்படுத்துகிறோம்.
2013 -- 2016,
February -- July இவை
சில எடுத்துக்காட்டுகள்.
Em dash என்பது முன்பு
குறிப்பிட்டதைவிட மேலும் சற்று நீளமான கோடு. ‘m’ எழுத்துக்குத் தேவைப்படும்
நீளம் என்று வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் நெருங்கிய
உறவினர்களுக்கு எழுதும் கடிதங்களில் em dash பயன்படுத்தப்படுகிறது.
ஒரு comma அல்லது colonனுக்குப் பதிலாக சில
இடங்களில் em
dash பயன்படுத்தப்படுகிறது.
You are the friend
-- -the only friend -- - who offered to help me.
Please call my
assistant -- -Stephen -- - about this training programme.
எண்ண ஓட்டம் சடாரென
மாறுபடுவதைக் குறிக்கவும் em
dash பயன்படுகிறது.
I wish you would
-- -oh, never mind leave it.
Perpetrate என்றால் ஒன்றைச்
செய்வது என்று பொதுவாகச் சொல்லலாம். என்றாலும் சட்ட மீறலான அல்லது ஒழுங்கு மீறலான
ஒரு காரியத்தைச் செய்யும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
A crime has been
perpetrated against the local residents.
இந்த வார்த்தையை perpetuate என்ற வார்த்தையோடு
குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. Perpetuate
என்றால்
ஒன்றை இடைவிடாமல் தொடர்ந்து செய்வது. This is a monument to perpetuate the memory of
those died in Jallianwala Bagh massacre.
Perpetuate என்பதன் மற்றொரு
வடிவம்தான் perpetual.
இந்த
வார்த்தையைக் கூறும்போது அதோடு தொடர்புடைய indefinitely என்பதையும்
குறிப்பிடத் தோன்றுகிறது.
Consensus of
opinion என்றால்
என்ன?
இது ஒரு
வாசகரின் வினா.
ஒருமித்த முடிவு எனலாம். ஆனால்
consensus
என்றாலே
ஒருமித்த கருத்து என்றுதான் அர்த்தம். எனவே consensus மட்டுமே போதும்.
அல்லது unanimity
of opinion எனலாம்.
The proposal was accepted with single voice என்பது தவறு. The proposal was accepted with one voice என்பதே சரி
Post a Comment