இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!
மராட்டிய வீர சிவாஜியின்
படைகளில் இருந்த 1,50,000 படை வீரர்களில் 60,000 பேர் இஸ்லாமியர்கள். சிவாஜியின் அந்தரங்க காரியதரிசி
மவுலி பஷீர்கான்.
* சிவாஜியை எதிர்த்துப் போராடிய பாமினி
சுல்தான்களின் படைகளில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.
* 1857 இல் நடந்த முதல் விடுதலைப் போரில் வீர
காவியம் படைத்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் காலாட் படைத் தளபதி குதாபாகஸ், படைத்தளபதி கவுஸ்கான், அவரது தனிப்பாதுகாப்பு அதிகாரி மன்ஸர் ஆகியோர் இஸ்லாமியர்.
* நாகூர் தர்காவின் கோபு ரத்தைக்
கட்டியது சரபோஜி மன்னன்.
* சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை தர்கா
நிர்வாகம் - திருமுட்டத்திலிருந்து வரும் பூவராகவர் சாமிக்குத் திரு விழா நடத்த, திருவிழா நாள் தோப்பு என்று 15 ஏக்கர் புஞ்சை நிலத்தை அளித்தது. அந்த சாமியின்
வருமானத் திற்கு 40 ஏக்கருக்கும் மேற் பட்ட நிலத்தை
சாசுவத தானமாக 1891 ஆம் ஆண்டு வழங்கி உள்ளனர். இப் போதும்
கிள்ளைக்கு அந்த சாமி வரும்போது, இஸ்லாமியர்கள் வந்து
வரவேற்பார்கள்.
* எட்டுக்குடி முருகன் கோவில்
திருவிழாக்களில் மின் விளக்குகளைக் கட்டுவது முஸ்லீம்கள்.
* ஆத்தூர் வண்டிக் காளியம்மன் சிகப்பு
உடை அணியும்போது காளி, பச்சை உடை அணியும்போது முத்தாளம்மன்.
கடவுள் புறப்படும் போது நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் தூக்கும் உரிமை முஸ்லீம்
மக்களுக்கும், இன்னொரு பக்கம் தூக்கும் உரிமை கிறிஸ்தவர்களுக்கும்; மீதமுள்ள இரண்டு பக்கங்கள் இந்துக்களுக்கும் உண்டு.
சாமி வரும்போது முஸ்லீம் தெருக்களில் முறைப்படி தேங்காய் உடைப்பார்கள்; ஆரத்தித் தட்டை வீட்டுத் திரையிலிருந்து
கைநீட்டுவார்கள். பூசாரி வாங்கிச் சென்று, அர்ச்சனை செய்து பிரசாதத்தைத் தருவார்.
* வைணவத்தின் தலைமையிடமான
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு கைலி சாத்தப்படுகிறது. துலுக்க நாச்சியார்
சன்னதியும் அங்குண்டு.
* பாண்டிச்சேரி மக்களால் பாய் முருகர்
என்று அழைக் கப்படுபவர் 1940 இல் பிறந்த முகம்மது
கவுஸ் என்ற இஸ்லாமியர். துளசி முத்துமாரியம்மன் ஆலயத்தையும், கௌசிக பாலசுப்பிரமணியர் கோவிலையும் கட்டியது அந்த இஸ்லாமியரே!
அந்த முருகன் ஆலயத்தில் முகமது கவுசின் திருவுருவப்படம் உள்ளது.
எடுத்துக்காட்டுகளுக்குச்
சிலவே என்று - இவ்வளவையும் எழுதி இருப்பவர் - இந்து அறநிலையத் துறையில் பணியாற்றி
ஓய்வு பெற்ற அதிகாரி எஸ்.ஜி.ரமேஷ்பாபு! நூலின் பெயர் ‘யார் கைகளில் இந்து ஆலயங்கள்?' என்ப தாகும். (2019, வெளியீடு பாரதி புத்தகாலயம்).
Post a Comment