Translate

72 அஞ்சுபவை


சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 72 அஞ்சுபவை 

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;

அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;

மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்

திறவதின் தீர்ந்த பொருள். . . . .[72]

நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்; - மன உறுதி உள்ளவர்களை வறுமை அணுகாது.

அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்; - தர்மத்தை நினைப்பவர்களை கெட்ட எண்ணங்கள் அணுகாது.

மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - வீரனை கண்டு எல்லா உயிர்களும் பயப்படும்.

Poverty fears those with a steadfast heart.

Evil fears those who contemplate righteousness.

Every living being fears the valiant warrior.

இந்த வரிகள் வாழ்க்கையில் மன உறுதி, நீதி மற்றும் வீரம் ஆகிய குணங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இந்த குணங்களை கொண்டிருப்பவர்கள் வறுமை, தீய எண்ணங்கள் மற்றும் பயம் போன்ற தடைகளை எளிதில் கடக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது.

ஐம்புலன்களை அடக்கியவனைப் பார்த்து வறுமை பயப்படும். அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும். கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும். இம்மூன்றும் மிகவும் வலிமை மிக்கவனாகும்.



Post a Comment

Previous Post Next Post