Translate

61 அமைச்சர்களின் கோள்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 61 அமைச்சர்களின் கோள்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,

எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்

மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்

வீறு சால் பேர் அமைச்சர் கோள். . . . .[61]

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்: ஐந்து புலன்களையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) தன் கட்டுப்பாட்டில் வைத்து, நல்ல வழியில் நடத்தல்.

எய்துவது எய்தாமை முன் காத்தல்: வரப்போகும் துன்பங்களை வருமுன் அறிந்து காத்துக்கொள்ளுதல்.

வைகலும் மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல்: நாள்தோறும் மாறுபடும் அரசர்களின் மனநிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுதல்.

இம் மூன்றும் வீறு சால் பேர் அமைச்சர் கோள்: இவை மூன்றும் சிறந்த அமைச்சரின் பண்புகளாகும்.

Controlling the five senses and acting righteously: To keep the five senses (touch, taste, sight, smell, hearing) under control and act in a virtuous manner.

Anticipating and preventing impending dangers: To foresee and protect oneself from troubles before they arise.

Understanding the ever-changing moods of kings: To comprehend the fluctuating states of mind of rulers and act accordingly.

These three are the traits of an excellent minister: These three qualities are the hallmarks of a distinguished minister.

ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.



Post a Comment

Previous Post Next Post