Translate

59 உள்ளவை போல் கெடுபவை

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 59 உள்ளவை போல் கெடுபவை

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்

கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்

உள்ளன போலக் கெடும். . . . .[59]

1. உறவினர்களுக்கு உதவாதவனின் செல்வம்

2. பயிர் வளரும் காலத்தில் கவனிக்காத விவசாயம்

3. வெறும் கள் உண்பதற்காக மட்டும் வாழும் இளைஞனின் குடும்ப வாழ்க்கை இந்த மூன்றும் இருப்பது போல் தோன்றினாலும் அழிந்து போகும்.

சுற்றத்தார்க்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் காவல் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் நிலைக்காது அழியும்.\

The wealth of one who does not help their relatives, The farming that is neglected during the growing period, The household of a youth who lives merely to drink liquor and eat, These three will perish though they appear to exist.



1 Comments

Post a Comment

Previous Post Next Post