திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார். . . . .[49]
"ஏவியது மாற்றும் இளங் கிளையும்" - தன் பெரியவர்கள் சொன்னதை மாற்றி பேசும் இளைஞர்களும்
"காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும்" - அடக்கம் இல்லாமல் பிறரை இகழ்ந்து பேசும் புதல்வனையும்,
"பொய் தெள்ளி அம் மனை தேய்க்கும் மனையாளும்" - பொய் சொல்லி வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும்
"இம் மூவர் இம்மைக்கு உறுதி இலார்" - இந்த மூன்று வகையான மக்களும் இந்த பிறவியில் நல்வாழ்வு பெற மாட்டார்கள்.
மனைவியை இகழ்ந்து பேசுகின்ற கணவனும், தந்தை சொல் கேளாத புதல்வனையும், தான் வாழும் வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும், எவருக்கும் பயனில்லாதவர் ஆவார்.
This ancient Tamil poem describes three types of people who will not prosper in this life:
"Young people who contradict what their elders say" - This refers to those who disrespect and disobey their elders' advice and guidance.
"A leader who, without restraint, speaks abusively and mockingly" - This refers to someone in a position of authority who uses harsh and disrespectful language towards others, lacking self-control and humility.
"A wife who, by lying, destroys the wealth of the household" - This refers to a wife who is dishonest and squanders the family's resources, causing financial ruin.
These three types of people are said to be "without certainty in this life," emphasizing that their actions will lead to negative consequences and a lack of well-being.
Post a Comment