IDC (Independent Delivery Centre) பற்றி விரிவான தகவல்கள் உங்கள் பார்வைக்கு.
A.Kesavan AGS NFPE P-3
அஞ்சல் துறையில் தபால்களை பட்டுவாடா செய்வதற்கு என தனியாக ஒரு மையத்தை திறப்பதற்கு (IDC) நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பார்சல் பட்டுவாடா செய்வதற்கான அலுவலகங்களை இணைத்து நோடல் டெலிவரி சென்டர்கள் (NDC) உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் நீட்சியாகவே இந்த ஆணையானது வெளிவந்துள்ளது.
தற்போது ஒரு நபர் அலுவலகம் மற்றும் இரு நபர் அலுவலகங்களில் தபால் பட்டுவாடா பணிகளை மேற்பார்வையிடுவது என்பது கவுண்டர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு இடையில் மிகவும் சிரமமான பணியாக உள்ளது.
19,500 தபால் பட்டுவாடா அலுவலகங்களில் பெரும்பான்மையானவை ஒரு நபர் மற்றும் இரு நபர் அலுவலகங்களாக இருக்கின்றன.
மெயில் மானிட்டரிங் யூனிட் (MMU) என்பது இயக்குனரகத்தில் இருந்து கோட்ட அலுவலகம் வரை தபால்கள் பட்டுவாடா குறித்து மேற்பார்வையிடும் மற்றும் தபால் பட்டுவாடா தரம் உயர்த்தும் பணியினை செய்து வருகிறது. எனினும் கடைநிலையில் டெலிவரியில் நிலவுகின்ற குறைபாடுகளை தீர்க்கும் விதமாக எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இந்த IDC என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி நிறைந்த இந்த சூழலில் பிரைவேட் கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் போட்டிகளை சமாளிக்க ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் டெலிவரி செய்து வருகின்றன. எனவே IDC முடிவை எடுப்பது மிகுந்த அவசியம் என Department கருதுகிறது. ஏற்கனவே நோடல் டெலிவரி சிஸ்டம் பார்சல் என்பது நல்ல பலனை அளித்திருப்பதால் அதனை ஸ்பீட் போஸ்ட், பதிவு தபால் ,சாதாரண தபால் என அனைத்திற்கும் விரிவுபடுத்த இலாகா முடிவு செய்துள்ளது.
தற்போதைய நோடல் டெலிவிரியில் (NDC)அருகருகே உள்ள அலுவலகங்கள் அல்லது ஒரே நகரில் உள்ள அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனினும் IDC-களில் இதே போன்று ஒரு நகரில் உள்ள டெலிவரி அலுவலகங்கள் இணைக்கப்படுமா? அல்லது 50 முதல் 80 தபால்காரர்களைக் கொண்ட டெலிவரி அலுவலகங்கள் இணைக்கப்பட்ட IDC என்பது உருவாக்கப்படுமா ? என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியும் . ஏற்கனவே உள்ள நோடல் டெலிவரி சென்டர்கள்(NDC) IDC களாக உயர்த்தப்படும் அல்லது புதிதாக உருவாக்கப்படுகின்ற IDC கள் உடன் இணைக்கப்படும்.
IDC களை செயல்படுத்துவதற்கென இலாகாவினுடைய சொந்த கட்டிடம் ஐம்பதும் புதிதாக கட்டிடம் கட்டுவது உட்பட மற்றும் 1800 வாடகை அலுவலகங்களில் இயங்கி வரும் கட்டடங்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே Project Arrow என்பது சொந்த கட்டிடங்கள் மட்டுமல்லாமல் வாடகை கட்டிடங்களிலும் செயல்படுத்தப்படும் என இலாக்கா கடந்த வருடம் அறிவித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த கட்டிடங்கள் குறித்த ஒரு போஸ்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் ஸ்கீம் என்பது கடந்த வருடமே உருவாக்கப்பட்டு விட்டது .அதே திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஆதாரங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் என்பது நடைமுறையில் முழுமையாக முடிவடைய மூன்று வருடங்களாகும்.
ஏற்கனவே Project Arrow என்பது சொந்த கட்டிடங்கள் மட்டுமல்லாமல் வாடகை கட்டிடங்களிலும் செயல்படுத்தப்படும் என இலாக்கா கடந்த வருடம் அறிவித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த கட்டிடங்கள் குறித்த ஒரு போஸ்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் ஸ்கீம் என்பது கடந்த வருடமே உருவாக்கப்பட்டு விட்டது .அதே திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஆதாரங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் என்பது நடைமுறையில் முழுமையாக முடிவடைய மூன்று வருடங்களாகும்.
தற்போதைய சூழலில் 2028- 29 நிதியாண்டில் இந்த திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால் துறையில் மிகப்பெரிய ஒரு நிர்வாக சீர்திருத்தத்திற்கு இந்த ஆணை என்பது வடிவமைக்கும் என நம்பப்படுகிறது.
கடந்த வருடங்களில் தபால்காரருடைய Beat மாற்றம், தபால்காரர் டெலிவரி செய்வதற்கு சொந்த மோட்டார் சைக்கிளை உபயோகப்படுத்துவது, RMS அலுவலகங்களை இணைப்பது, RMS அலுவலகங்களுக்கு மாற்றாக ரோடு ட்ரான்ஸ்போர்ட் நெட்வொர்க RTN என்ற சேவையை உருவாக்குவது என பல தொடர்ச்சியான ஆணைகள் வெளிவந்துள்ளன.
மேலும் அனைத்து அலுவலகங்களுக்கும் புதிதாக Establishment Review என்பது செய்யப்பட வேண்டும் எனவும் ஆணை வந்துள்ளது.
இந்த ஆணைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்க்க முடியாது. இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எனவே இனி வரும் காலங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நமது இலக்காக சந்திக்க உள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் எந்த வகையில் நமக்கு பலன் அளிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும் .எனினும் ஒரு மிகப்பெரிய சவால் நிறைந்த காலகட்டத்திற்குள் நாம் நுழைகின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
Dte Lr.No 16-01/2025 DTD 14.1.25
Dte Lr.No 16-01/2025 DTD 14.1.25
Post a Comment