Translate

உரிமையின் எழுச்சி -நாளை... நமதே! நம்பிக்கையின் வெற்றி நிச்சயம் நமதே!!

உரிமையின் எழுச்சி 
நாங்கள் நிழல்கள் அல்ல...
நேர் நின்று பேசும் 
நெஞ்சுரம் கொண்டவர்கள்!
இருபது மாதங்கள் 
இருளாய் கழிந்தன 
என்ன பயன்? 

எங்கள் ஒளி அணையவில்லை!
அங்கீகாரம் மறுத்தீர்கள் 
ஆனால் அடிமனதில் அறிவீர்கள் 
ஆயிரம் விளக்குகள் அணைந்தால் என்ன? 
அடுத்த தலைமுறை ஏற்றிக்கொள்ளும்!

குறிப்பு புரிந்தது 
கூட்டம் கலையவில்லை 
குரல்கள் ஓய்ந்தது 
கொள்கை மறையவில்லை!

நீதிமன்றம் சொன்னது 
'நிறுத்துங்கள்' என 
நீங்கள் கேட்கவில்லை 
நினைவில் கொள்ளுங்கள்...

நேற்றைய புயல் இன்றைய விதை!
உங்கள் மௌனம் உறக்கம் போல 
எங்கள் காத்திருப்பு எரிமலை போல!
தபால்துறை கேட்டுக்கொள்... 

தாமதம் ஏன்? 
தருணம் இது! 
தயக்கம் வேண்டாம்! 
தலைகுனிவு தவிர்!

ஒன்றல்ல இரண்டல்ல 
ஆயிரம் ஆண்டுகள் 
அனுபவம் எங்களுக்கு! 
அச்சமில்லை! அச்சமில்லை! 
அச்சமே இல்லையே!

வானத்து மேகங்கள் 
வடிவம் மாறும் 
வாழ்வின் சோதனைகள் 
வலிமை சேர்க்கும்!

உரிமை என்பது உயிர் மூச்சு! 
ஒற்றுமை என்பது ஓங்கும் கொடி!
காலம் கனிந்தது களம் விரிந்தது 
கனவு நனவாகும்! கண் திறந்து பார்!

நாளை... நமதே! 
நம்பிக்கையின் வெற்றி நிச்சயம் நமதே!!


Post a Comment

Previous Post Next Post