நாம் இதுவரை Gemini மற்றும் OpenAIயின் Chat GPT போன்ற மொழி மாதிரிகளின் சிறப்புகள் குறித்து ஆராய்ந்தோம். இவை மட்டும்தான் இருக்கின்றனவா என்ற கேள்வி உங்களுக்கு நிச்சயம் எழும். உண்மையில், நவீன தொழில்நுட்ப உலகில், இவற்றினை தவிர மேலும் மேம்படுத்தப்பட்ட பல மொழி மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில், நாம் அவற்றில் முக்கியமான, தவிர்க்க முடியாத இரண்டினை பற்றியும் அவற்றின் தனிச்சிறப்புகள், பயன்பாடுகள், மற்றும் இந்த துறைக்கு அவை கொண்டுவரும் மாற்றங்களை கொஞ்சம் தான் பார்க்கப் போகிறோம். இது வெறும் அறிமுகம் தான். விரிவாக எழுத வேண்டுமாயின் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி புத்தகமே போட வேண்டும்.
Claude மற்றும் XAI இந்த இரண்டு மொழி மாதிரிகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். உண்மையில், இவற்றின் ஆழமான சிந்தனைகள், செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ரொம்ப நாட்களாகும். இவை கொண்டுள்ள தனிச்சிறப்புகளும், நவீன தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தும் புரட்சிகளும் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியவை!
முதலில் Claude பற்றிப் பார்ப்போம். இது OpenAI, ChatGPT போலவே ஒரு சக்திவாய்ந்த மொழி மாதிரி என்றாலும், அதன் வார்த்தைப் பயன்பாடு மற்றும் நடையில் தனித்துவம் வெளிப்படுகிறது. Anthropic நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மொழி மாதிரியின் ஒவ்வொரு பதிப்புக்கும் இனிமையான மேற்கத்திய இசை பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது: Haiku, Opus, மற்றும் சமீபத்திய Sonnet. இந்த பெயர்கள் இந்த நிறுவனத்தின் கலைப்பற்றையும் படைப்பாற்றலையும் பிரதிபலிக்கின்றன. வெறும் நம்பர்களாக இல்லாமல் ஒரு பெயரை கொண்டிருப்பது இதன் சிறப்பு.
2022ல் தொடங்கப்பட்ட இந்த மொழி மாதிரிக்கான ஆராய்ச்சி, 2024 பிப்ரவரியில் வெளியீடு காண, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. Claude-ன் சிறப்புமிகு அம்சங்களில் ஒன்று அதன் மொழி செயலாக்க முறை. மற்ற மொழி மாதிரிகள், வார்த்தைகளை சங்கிலியாக ஒருங்கிணைக்கும்போது, இந்த வார்த்தைக்கு அடுத்து இந்த வார்த்தை தான் எனும் சங்கிலிப் பிணைப்பை கொண்டிருந்தாலும் Claude அதிக சிக்கலான, ஆனால் துல்லியமான resultகளை அளிக்கிறது.
நமது பூமாலை YouTube சேனலில் "AI சொல்லும் கதைகள்" என்ற தலைப்பில் வெளியிட்ட இரண்டு வீடியோக்களும் Claude உதவியுடன் உருவாக்கப்பட்டது. இதன் கதைகள் மிக சுவாரஸ்யமாகவும், வார்த்தைகள் கொஞ்சம் நவீனமாகவும் இலக்கண தன்மைக் கொண்டதாகவும் இருந்தன. Claude வெறும் கதைகளை உருவாக்குவதில் மட்டுமில்லை; கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் ஆகியவற்றையும் அற்புதமாக உருவாக்கக் கூடிய திறனைக் கொண்டது.
சில ஆங்கில திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ்கள் கூட Claude மூலமாக உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறந்த தொழில்நுட்பம், சுவாரஸ்யமான கலை சார்ந்த படைப்புகள் என இந்த இரண்டும் கலந்த ஒரு மிகச்சிறந்த படைப்பு Claude!
அடுத்து XAI பற்றி பார்ப்போம். பெயரை கேட்டவுடன், இது X (முன்னர் Twitter என அழைக்கப்பட்டது)-ன் தயாரிப்பா என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்ததா? சந்தேகமே வேண்டாம், ஆம், இது Elon Musk-ன் X தளத்தின் பங்கு. இப்போது வரை இது முழுமையாக உருவாகிவிடவில்லை, அதன் Beta Versionஏ பரவலாக பேசப்படுகிறது.
எலான் மஸ்க்ன் புகழ்பெற்ற தரத்தை மையமாகக் கொண்டு, XAI மிகச் சிறப்பான, ஆழமான, மற்றும் வேகமான செயல்திறனை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நவீன நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இது சிக்கலான பிரச்சனைகளுக்கும் திறம்பட பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது, XAI Grok என்ற பெயருடன் சோதனை வடிவில் இருக்கிறது. ஆனால் அதன் திறன்களை முன்னரே காண முடிகிறது. அதன் முழு வடிவம் வெளிவந்தவுடன், தொழில்நுட்ப உலகில் மாபெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, Elon Musk மற்றும் அவரது குழுவின் திறமை, XAI-ஐ ஒரு விஞ்ஞான அதிசயமாக மாற்றும். இந்த மேம்படுத்தப்பட்ட மொழி மாதிரி, வெறும் தகவல்களை மட்டுமல்லாமல், அடுத்த பரிணாமத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும்!
இன்றைய உலகில் பல புதிய மொழி மாதிரிகள் வந்துவிட்டன. இதனால் மனிதர்களின் படைப்பாற்றல் குறைந்து விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் எழுகிறது. கால்குலேட்டர் வந்தபோது, "மூளையின் கணக்கிடும் திறன் குறைந்துவிட்டது" என்று சிலர் குற்றம் சாட்டினார்கள். மொபைல் வந்தபோது, "ஞாபகத்தில் மொபைல் எண்களை வைத்திருக்கும் பழக்கம் மறைந்துவிட்டது" என்றார்கள். ஆனால் நாம் பார்க்க வேண்டியது இதன் குறைகளை அல்ல; இதன் பயன்களை தான்!
இது உண்மையில் எவ்வளவு நன்மைகள் தருகிறது என்பதை ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் விளக்குகிறேன்.
என் நண்பர் ஒருவர், காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்ய சென்றார். அங்கு தனது புகார் கடிதத்தை எழுதுவதற்காக ஒரு அலுவலரிடம் நிறைய கூட்டத்தில் லைனில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. என் நண்பர் அந்த அலுவலரிடம், "இதற்கு ஒரு சுலபமான தீர்வு இருக்கிறது. மொழி மாதிரிகளை பயன்படுத்தினால், இந்த வேலையை மிக விரைவாக முடிக்கலாம்!" என்று கூறினார். அந்த அலுவலர் அதை ஆர்வமாக கேட்டு, அவற்றைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, உடனே பயன்படுத்தத் தொடங்கினார்.
மறுநாள், என் நண்பர் காவல்நிலையத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த அலுவலர் புன்னகையுடன், "ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட்டேன். இப்போ டைமுக்கு சாப்பிடுறேன், நன்றி!" என்று மகிழ்ச்சியாக கூறினார்.
என் நண்பர் இந்த அனுபவத்தை அலுவலகத்தில் பெருமையாக, “எப்படி தொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு உதவுகிறது!" என்றார்.
இந்த எளிய சம்பவம் நம் கண்களுக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்கிறது: மொழி மாதிரிகள் நம் மூளையின் வேலைகளை மட்டும் இல்லை, நம் நேரத்தையும் மிகச் சிறப்பாகச் சேமிக்கும் சாதனங்கள். அவற்றை சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கை எளிதாகும், செயற்பாடு சுறுசுறுப்பாக மாறும். இது தொழில்நுட்பத்தின் இயல்பே!
இதைதான் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம் – வெறும் குறைகளை அடுக்குவது மட்டும் போதாது; தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வில் பொருத்திக் கொள்ள பழக வேண்டும்.
உண்மையில் சிந்தித்து பாருங்கள்: இன்று, அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் வேலை நேரத்தில் அல்லது மாணவர்களைத் தவிர, உண்மையாகவே எத்தனை பேர் பேனா பிடித்து ஏதாவது எழுதுகிறார்கள்? அல்லது படிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது புத்தக கண்காட்சியில் புத்தகங்களின் விற்பனை. நமது பழக்கவழக்கங்கள் முழுமையாக மாற்றம் பெற்று விட்டன.
தொழில்நுட்பம் நம் நேரத்தை சேமிக்கவும், நம் முயற்சிகளை சிறப்பாகச் செய்யவும் உதவுகிறது. இதை ஏற்காமல் நிற்கும்போது, நாம் முன்னேற்றத்தின் நல்ல வாய்ப்புகளை இழக்கிறோம்.
-S.B.
Post a Comment