Translate

கிரிப்டோகரன்சிகளுக்கு ஆபத்தா?

டிஜிட்டல் உலகத்தில் யாராலும் எந்த நிலையிலும் உடைக்க முடியாத ஒழுங்கான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் பெயரே Blockchain Technology. இந்த நவீன தொழில்நுட்பமே அனைத்து மெய்நிகர் நாணயங்களின் (Cryptocurrency) பின்புல சக்தியாக செயல்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கும் நம்பகத்தன்மைக்கும் எவ்வித சவாலையும் நிறுத்த முடியாத அளவுக்கு இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த உறுதியான க்ரிப்டோ கரன்சிகளைச் சவாலுக்கு உட்படுத்த ஒருவன் தோன்றியுள்ளான். Blockchain உலகத்திற்கு இது ஒரு நம்பிக்கையா, அல்லது இடையூறா என இனி எதிர்காலம் தீர்மானிக்கப் போகிறது!


சமீபத்தில், Google தனது குவாண்டம் கம்ப்யூட்டர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உலகை ஆச்சர்ய பட வைத்தது. இதன் மூலம், நவீன கணினி தொழில்நுட்பத்தின் எல்லைகளை மீறி, யாராலும் எதிர்பார்க்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத Quantum சிப்பினை அறிமுகம் செய்தது.


இந்த அறிவிப்பின் மூலம் ஒரு புதிய யுகத்திற்குத் துவக்கமிட்ட Google, மெய்நிகர் நாணயங்களின் (Cryptocurrencies) பாதுகாப்பு அமைப்புக்கு புதிய சவாலாக மாறி இருக்கிறது. Blockchain Technology-க்கு ஆபத்து என்றால் என்ன? குவாண்டம் கணினியின் அதிவேகமான ஆற்றலால் இந்த நாணயங்களின் பாதுகாப்பை உடைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை? இதன் விளைவுகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!



Cryptocurrencies பயன்படுத்துபவர்களின் பெயர், முகவரி, அவரின் Transactions போன்ற தகவல்கள் அனைத்தும் முழுமையாக மறைக்கப்பட்டு, அவர்களுக்கு என தனிப்பட்ட அதாவது Bitcoin என்றால் 26 எழுத்துக்களிலும் Etherium என்றால் 42லிருந்து 45 எழுத்துக்கள் கொண்ட ஒரு அடையாளக் குறியீடு (address) வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் இவ்வாறு தனித்தனியான அட்ரஸ் உருவாக்கப்படும். அதில் பெயர் முகவரி என எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், அந்த நபரின் இந்த அட்ரஸ்ஸுக்கு தான் அனுப்ப முடியும்.


அப்படி பணம் அனுப்புகிறோம் அல்லது பெறுகிறோம்  என்றால் அதாவது transaction செய்கிறோம் என்றால் குறைந்தது 8 பேரின் (அவர்களை மைனர்கள் என்று அழைப்பார்கள்) அங்கீகாரம் அவசியம். அவர்களால் அந்த transaction சரியாகத்தான் நடந்தது என்பதை உறுதிப்படுத்திய பிறகே, அதற்கென ஒரு Transaction Ledger உருவாக்கப்படுகிறது. அந்த Ledger, Blockchain எனப்படும் சங்கிலித் தொடரில் முன்னும் பின்னும் Blockகள் கொண்டு இணைக்கப்படும். இப்படி இணைத்த பின் இந்த சங்கிலித் தொடர் பரவலாக அனைவரிடமும் சேமிக்கப்படும். இதுவே Blockchain தொழில்நுட்பத்தின் பலம். ஏதாவது ஒரு சர்வர் வேலை செய்யவில்லை என்றாலும் வேறு ஒன்றிலிருந்து நம்முடைய Transaction பெற்று விடலாம். இதனால் எந்த வித பிழையும் ஏற்படாது, மேலும் நம்முடைய பணம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கும் அதுவே உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு Block அதிக பட்சமாக 4000 Transactions கொண்டிருக்கும். 



ஆனால், இதுவே இந்த தொழில்நுட்பத்தினை பல நாடுகளில், குறிப்பாக நம்முடைய இந்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யார் யாருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்பதைத் தெரியாமல் இதன் செயல்பாடு நடைபெறுவதால், மேலும் பரவலாக்கல் அடிப்படையில் யாராலும் கட்டுபடுத்த முடியாததால் இதை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத, பயங்கரவாத செயல்களுக்கு உதவக்கூடும் என்ற கவலையும் இதற்குக் காரணம். அதனால் தான் இந்தியா இதன் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் அதிகப்படியான வரிகள் விதிக்கிறார்கள். 


இதன் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை பலவீனமா அல்லது ஆற்றலா என்பதை வரும் காலமே தீர்மானிக்கும்!


சரி, இப்போது முக்கிய விஷயத்திற்குச் செல்வோம். Blockchain Technology-யின் அடிப்படையாக செயல்படும் சங்கிலித் தொடர் போன்று இருக்கும் Ledgersகள் அதாவது Blockகள் அனைத்தையும் உடைத்து பிரித்துப் போடக் கூடிய சக்தி, அண்மையில் அறிமுகமாகியுள்ள Quantum Chip-க்கு உள்ளது.



இந்த குவாண்டம் சிப், அதன் அதிவேக கணினி திறனைப் பயன்படுத்தி, எப்பேற்பட்ட சிக்கலான கணக்குகளையும் சரி செய்யக் கூடிய திறனுடைய இந்த சிப் Blockchain-இன் பாதுகாப்பு அமைப்புகளை சவாலுக்கு உட்படுத்தும். இதுவே Cryptocurrencies பயனர்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் கருதப்பட்ட Blockchain-க்கு இந்த புதிய குவாண்டம் தொழில்நுட்பம் எதிர்வினை கொடுக்குமா அல்லது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளதால், கிரிப்டோ உலகம் முழுவதும் பீதியில் ஆழ்ந்துள்ளது.


இந்த அச்சப்பூர்வமான சூழலில், கிரிப்டோ உலகத்திற்கு ஒரு ஆறுதல் செய்தியாகத் தோன்றியது Solana எனும் ஒரு க்ரிப்டோ கரன்சியின் அறிவிப்பு. Solana நிறுவனம், தங்களுடைய Transactions-க்கான Ledger-களை பாரம்பரிய Blockchain போல Pow (Proof of work) முறையில் இல்லாமல் Pos (proof of Staking மற்றும் poh (proof of hour) முறையில் (இது பற்றி விரிவாக நேரம் கிடைத்ததும் அடுத்தப் பதிவில் பார்ப்போம்) மாற்றி ஒவ்வொரு Transaction-க்கும் தனித்தனியாக ஒரு Hash Tag (அல்லது, தனிப்பட்ட அடையாளம்) வழங்குகின்றது.



இதன் மூலம், ஒவ்வொரு Ledgerம் Block Chainலும் தானியக்கமாக தனித்தனியாகவும் செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை, Quantum Chip-இன் அதிவேக இயக்க சவாலை ஒரு அளவுக்கு சமாளிக்க முடியும் என Solana உறுதியளித்துள்ளது.


இந்த புதுமையான பாதுகாப்பின் மூலம்  Quantum Computing இன் அழுத்தத்தில் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான மற்றுமொரு படியாக இது பார்க்கப்படுகிறது. Solana-வின் இந்த முயற்சி மற்ற கிரிப்டோ கரன்சிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம்! கொஞ்சம் கொஞ்சமாக புதிய முயற்சிகள் ஏற்படுவதற்கும் இது வழி வகுத்துள்ளது. 


நாம் முன்னரே கூறியிருப்பதன்படி எந்த தொழில்நுட்பமும் நமக்கு கேடு விளைவிக்காதென்றால் அதனை இருகரம் கொண்டு வரவேற்போம். 


-S.B.

Post a Comment

Previous Post Next Post