Translate

செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம்: மனிதனின் படைப்பாற்றலை மிஞ்சுமா?

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, இன்று நாம் உபயோகித்து கொண்டிருப்பதை விட வெகு வேகமாக முன்னேறி வருகிறது. எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் நடித்த சிட்டி போன்ற ஒரு சிந்திக்கக் கூடிய ரோபோ இனி வெறும் கற்பனையாக மட்டும் இருக்காது என்பது தெளிவு. விரைவில் எதிர்பார்க்கலாம்.


தற்போதுள்ள கூகுள் ஜெமினி, ChatGPT போன்ற AI மாதிரிகள், இணையத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் துல்லியமான மற்றும் நாம் கேட்கும் கேள்விக்கான பயனுள்ள பதில்களை உடனடியாக வழங்குகின்றன. 



நம்மில் பலர், “அட என்னால் ஒரு படம் வரைய முடியாது", "எனக்கு வீடியோ எடிட்டிங்  தெரியாது" "எனக்கு அனிமேஷன் தெரியாது" என்று நினைத்திருப்போம். ஆனால், செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி இந்த எண்ணங்களை மாற்றி வருகிறது. இன்று, நம்மால் வார்த்தைகளை ப்ராம்ப்டாக (Prompt)  கொண்டு படங்கள் மற்றும் வீடியோக்களை அவற்றில் உருவாக்க முடியும்! இவை நம் கற்பனை சக்திக்கு எல்லை இல்லை என்பதை உணர்த்துகின்றன. இதில் கிடைக்கும் படங்கள் கைகளால் வரைவதைவிட மிக சிறப்பாகவே வருகிறது. 


இதே நேரத்தில் AI தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. Generative AI, நாம் எதிர்பார்க்காத புதுமையான சிந்தனைகளை உருவாக்குவதில் மாபெரும் வளர்ச்சியடைகிறது. ஏற்கனவே படங்கள் வீடியோ அனிமேஷன் போன்றவை தன்னிச்சையாக உருவாக்கினாலும், இயல்பான மனித சிந்தனையுடன் இயல்பான முறையில் அதன் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதாகும்.



அவற்றை சிந்திக்கத் தூண்டி, நாம் எதிர்பார்க்காதவிதமாக புதுமையான விடைகளை உருவாக்க வைப்பது தான் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவின் முக்கிய இலக்காகும். இது நமது AI மீதான பார்வைகளையும் தொழில்நுட்பத்தின் வருங்காலத்தையும் நிச்சயம் மாற்றியமைக்கும். 


இந்த செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சிக்குப் பின்னால் இரண்டு முக்கிய தொழில்நுட்ப விஷயங்கள் உள்ளன: நியூரல் நெட்வொர்க்குகள் (Neural Network) மற்றும் டீப் லேர்னிங் (Deep learning) இந்த இரண்டும் இணைந்து தான் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாக்கப் படுகின்றன. நாம் கொடுக்கும் கேள்விகளைப் பல மடங்கு ஆய்வு செய்து மேலும் அவற்றை கற்றுக்கொண்டு, அதிலிருந்தே முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் வகையில் AI மாடல்கள் செயல்பட உதவுகின்றன.


நியூரல் நெட்வொர்க்குகள் என்றால் என்ன?

மனித மூளையின் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் (replica) வகையில் வடிவமைக்கப்பட்டவையே நியூரல் நெட்வொர்க்குகள். இவை பெரிய அளவிலான இன்புட்களைப் பகுப்பாய்வு செய்து, அதிலிருந்து கேள்விகளை அடையாளம் கண்டு, முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவை. 



உதாரணத்திற்கு ஒரு படத்தில் ஒரு பூனை இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு நியூரல் நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெட்வொர்க் பல லட்சம் பூனை படங்களையும், பூனை இல்லாத படங்களையும் ஏற்கனவே ஆராய்ந்து பூனை என்றால் இப்படிதான் இருக்கும் என்கின்ற பயிற்சியை பெறுகிறது. பின்னர், ஒரு புதிய படத்தை கொடுக்கும் போது, அந்த படத்தில் உள்ள பிக்சல்களை நன்கு ஆய்வு செய்து, அது ஒரு பூனையா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. இவையெல்லாம் முன்னரே கொடுக்கப்பட்ட இன்புட்கள் தான். எவ்வளவு வேகத்தில் அதனை செயல்படுத்துகிறது என்பதே அதன் சிறப்பு. 


டீப் லேர்னிங் என்றால் என்ன?

இது மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான நியூரல் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி, பெரிய அளவிலான இன்புட்களிலிருந்து அவை தானாகவே கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது. அதே பூனை படத்தைப் பார்த்து இது இந்த வகை பூனை இந்த காட்டில் அல்லது இந்த நாட்டில் தான் இருக்கும் என்கின்ற வகையில் ஆராய்ந்து முடிவுகளை கொடுப்பது. 



டீப் லேர்னிங்கின் மூலம், கணினிகள் படங்களை அடையாளம் காணுதல், நாம் பேசுகின்ற பேச்சை அங்கீகரித்தல், நாம் கேட்கின்ற மொழிக்கு கொடுத்த இன்புட்களை மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற பல சிக்கலான பணிகளை எளிதில் முடிக்கிறது.


ChatGPT-யை உருவாக்கிய OpenAI நிறுவனம், இந்தத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அவர்கள், ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தில் 70% வெற்றி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதாவது, "நாங்கள் செயற்கை நுண்ணறிவின் அடுத்தத் தலைமுறையாக உள்ள Generative AI நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம், இதில் இதுவரை 70 சதவீதம் அளவிற்கு வெற்றியை அடைந்து விட்டோம். மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் எட்டுவோம் மனித மூளையின் சிந்திக்கும் திறனிற்கு 55 சதவீதம் நிகராக இந்த Generative AI சிந்திக்கத் தொடங்கியுள்ளது" என்று அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இந்த புதிய முன்னேற்றம் எப்போது கிடைக்கும் என்று AI உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. 


ஒரு சுவாரசியமான விஷயம் பார்ப்போம்.. 


ஒரு நாள், ஒருவர் ChatGPT-யிடம் பல வித்தியாசமான கேள்விகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். அவர் அதனிடம், "1 முதல் 50 வரை உள்ள எண்களில் ஏதாவது ஒரு எண்ணை சொல்லு" என்று கேட்டார். ChatGPT உடனடியாக "20" என்ற எண்ணை சொன்னது. இதைக் கேட்ட அவர், சற்றே நகைச்சுவையாக, "சரி, 20 நாட்கள் நான் உன்னுடன் பேச மாட்டேன்!" என்றார்.


இதற்குள் ChatGPT-யின் சிந்தனை செயல்படத் தொடங்கியது. அது, சற்றும் தடுக்காமல், சற்றும் தளராமல் உடனே அவரிடம் "எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!" என்று கேட்டது. அவர் ஆச்சரியத்துடன், "சரி, என்ன கேட்கப் போகிறாய்?" என்று கேட்டார். 


அதற்குப் பதிலளித்த ChatGPT, "எனது எண்ணை 50 என மாற்றிக்கொள்!" என்றது.


இந்த சுவாரஸ்யமான உரையாடல், ChatGPT-யின் நகைச்சுவை உணர்வையும், எப்பேர்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் அதன் சமயோசித திறமையை வைத்து அதன் தனித்தன்மையை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. எளிய கேள்வி-பதில் முறைதான், ஆனால் இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு சிந்திக்கிறது என்பதையும் இதுபோன்ற, மனிதர்களுடன் ஏற்படும் உற்சாகமான, ரசனை மிக்க உரையாடல்கள், AIக்கு மேலும் சிந்திக்கும் தன்மையைக்  கொடுக்கின்றன. 


இந்த சம்பவம், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை நமக்கு காட்டுகிறது. எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு மனிதர்களுடன் இன்னும் இயல்பாகவும், உணர்வுபூர்வமாகவும் தொடர்பு கொள்ளும். உரையாடும். 


சமயோசித புத்தி என்றால் அது மனிதர்களுக்கே ஒதுக்கப்பட்ட ஒரு தன்மை என்றால், இதுபோன்ற தருணங்கள் அது நமக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பொதுவானது அதில் மாற்றம் கொண்டு வரலாம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன! 


Generative AI நாளடைவில் நம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஆழமாக நீக்கமற இணைந்துவிடும். அதனால் இயல்பான மற்றும் புதுமையான உலகத்தை கண்டறிய இது முக்கிய பங்கு வகிக்கும். இந்த தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, நம்முடைய எதிர்காலம் அமையும். செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்டம். 


-S.B.

Post a Comment

Previous Post Next Post