Team’s Daily Bytes
GDS Welfare Fund -7
By Com A.Kesavan, Asst General Secretary
02. |
GDS ஊழியரிடையே கணினி அறிவை வளர்த்திடும் விதமாக கணினி/மடிக்கணினி வாங்குவதற்கான
நிதிஉதவி |
·
அதிகபட்ச கடன்தொகையாக ரூ.20000/-
வழங்கப்படும். ·
GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும். ·
அவருக்கு 5 ஆண்டு பணிக்காலம்
மீதியிருத்தல் வேண்டும். ·
கடன் தொகையை புதிய கணினி/மடிக்கணினி வாங்குவதற்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய கணினி/மடிக்கணினி வாங்குவதற்கு
பயன்படுத்தக்கூடாது. ·
கணினி/மடிக்கணினி வாங்கியதற்கான ரசீதை
அதை வாங்கிய 1 மாதத்திற்குள்ளாகவோ (அ) கடன் வாங்கிய தேதியிலிருந்து 2
மாதத்திற்குள்ளாகவோ ஒப்படைத்தல் வேண்டும். ·
பெற்ற கடன் மற்றும் அதற்குண்டான வட்டி
தொகையினை மாதம் ரூ.1000/- வீதத்தில் 21 தவணைகளில் திரும்ப செலுத்தும் விதமாக
மாதாந்திர TRCA வில் பிடித்தம்
செய்யப்படும். |
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment