Team’s Daily Bytes
GDS Welfare Fund -6
By Com A.Kesavan, Asst General Secretary
குறைந்த வட்டியிலான (5%) திரும்ப
செலுத்தத்தக்க வகையிலான கடனுதவி (REPAYABLE
LOAN):
1)இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 5%
என்கின்ற குறைந்தபட்ச வட்டியில், அதிகபட்சமாக ரூ.50000/- வழங்கப்படும். இதனை 56
தவணையாகவோ/அதற்குள்ளாகவோ மாதாந்திர TRCA வில் பிடித்தம் செய்கின்ற வகையில்,
கடனுதவி பெற GDS ஊழியர் தகுதிபெறுவர்.
2)GDS ஊழியர்கள் அவரது மொத்த
பணிக்காலத்தில், அதிகபட்சமாக ரூ.50000/- என்கிற வகையில், முன்னர் ஏதேனும்
இதேபோன்று கடன்பெற்றிருப்பின், அது திரும்ப செலுத்தப்பட்டு, நிலுவை ஏதும் இல்லாத
நிலையில் இருமுறை இக்கடனுதவி பெற தகுதி பெறுவர்.
3) இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்
திரும்பசெலுத்துகின்ற வகையிலான கடனுதவி பின்வருமாறு.
வ எண் |
கடனுதவியின் பெயர் |
கடனுதவி பெற தகுதிகள் |
01. |
கிளை
அலுவலகம் செயல்பட கழிவறை(ஃப்ளஷ்டாய்லட்) உடனான ஒரு அறை கட்டிடம்கட்டுவதற்கான கடனுதவி |
· அதிகபட்ச கடன்தொகையாக ரூ.50000/-
வழங்கப்படும். · GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்
தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும். ·
அவருக்கு 8 ஆண்டு பணிக்காலம்
மீதியிருத்தல் வேண்டும். ·
இக்கடன் வசதி BPM பெயரில் உள்ள நிலத்தில் புதிய
கட்டுமானத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
புதுப்பித்தலுக்கோ/பழுதுபார்த்தலுகோ/முன்னரே கட்டிய அறையை வாங்குவதற்கோ
வழங்கப்படமாட்டாது. · கடன் பெற்ற 6 மாதத்திற்குள்ளாக
கட்டுமானத்தை முடிக்க வேண்டும். ·
பெற்ற கடன் மற்றும் அதற்குண்டான வட்டி
தொகையினை மாதம் ரூ.1000/- வீதத்தில் 56 தவணைகளில் திரும்ப செலுத்தும் விதமாக
மாதாந்திர TRCA வில் பிடித்தம்
செய்யப்படும்.
|
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
Post a Comment