Translate

திரிகடுகம் 24. நரகத்தைப் போன்றவை

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,

தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,

காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்

ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. . . . .[24]

மென்மையான தோள்களையுடைய கணிகையரின் மென்மையான மொழியும், தூண்டிலில் மீனுக்கு இரையாக வைக்கப்பட்ட தவளையும், பகைவர்களுடைய வணக்கமும், ஆகிய இம்மூன்றும் நரகம் போன்றதாகும்.



Post a Comment

Previous Post Next Post