Translate

Chat GPTயின் நாலு கால் பாய்ச்சல்

Google Gemini வெளியானதன் பின்னர், AIயில் முதலில் வெளிவந்த OpenAI நிறுவனம் தனது ChatGPT தளத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்களை மேற்கொண்டு மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த வெற்றியின் ஒரு மைல்கல் தான் ChatGPTயில் "Search" எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியதாகும்.


நான் முந்தைய கட்டுரைகளில் கூறியபடி கூகுளின் மிகப்பெரிய பலமே அதன் Search Engine ஆகும். உலகளாவிய வலைத்தளங்களில் உள்ள விவரங்களை ஒருங்கிணைத்து தன்னுடைய கூகுள் Searchல் வழங்கும் கூகுளின் திறமையால், அது பல துறைகளில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. 

அதே போன்றதொரு Search option எளிய வடிவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர OpenAI சிறந்த தீர்வை கண்டுபிடித்துள்ளது. "Search engine ChatGPTயுடன் ஒருங்கிணைத்தால் பயனர்கள் நேரடியாக அதிக அளவு தகவல்களை துல்லியமாகப் பெற முடியும்" என்ற யோசனையின் அடிப்படையில், இந்த புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது Chat GPT. 

ஒரு தகவலைப் பெறுவதற்காக, நாம் கூகுளில் தேடும்போது, அது பல வலைத்தளங்களை தொகுத்துக் காட்டி, அவற்றில் தேவையானதைத் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு தருகிறது. இந்த முறையில், பயனர்கள் அவர்களுக்கேற்ற தகவல்களைத் தேர்ந்தெடுப்பதில் முயற்சி செய்ய வேண்டும். Google Geminiயின் செயல்பாடு இதை எளிதாக்குவது போல் தோன்றினாலும், அது தகவல்களை வெறும் தொகுப்பாக அளிக்காமல், தொடர்புடைய மற்றும் அவற்றிற்கான லிங்க்குளையும் வழங்குகிறது.

ChatGPTயும் தொடக்கத்தில் விவரங்களை தொகுத்து அதற்கான லிங்க்குகளை அளிக்காமல் தந்துக் கொண்டிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் மூலம் அது ஒரு முற்றிலும் புதிய, மற்றும் பயனுள்ள வழிமுறையை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, அதன் பயனர்கள் தேடுதலின் நேரடியான முடிவுகளை வெறும் பதில்களாகப் பெறுவதோடு மட்டுமல்லாமல், தேடிய பொருளை விரிவாக ஆராயவும், கூடுதல் தகவல்களை அதற்கான லிங்க்குகள் அளித்தும், தேர்வு செய்யவும் வாய்ப்பு அளிக்கிறது.


இந்த ஒருங்கிணைப்பு ChatGPTயின் பயனர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இப்போது, பயனர்கள் தங்கள் கேள்விகளுக்கு நேரடி பதில்களைப் பெறுவதுடன், இணையத்தின் ஏராளமான தரவுகளையும் உடனடியாக அணுக முடிகிறது. முக்கியமான தகவல்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டு முடிவுகள், பங்குச் சந்தை நிலைகள் மற்றும் நவீன முன்னேற்றங்கள் போன்றவை விரைவாக அவைகளுடைய வலைகளுக்கான லிங்க்கள் வழங்கப்படுகின்றன.

இது ChatGPTயின் பயன்பாட்டை மேலும் வளர்த்ததுடன், Google மற்றும் OpenAI ஆகிய நிறுவனங்கள் நேரடியாக போட்டியிடும் சூழலை உருவாக்கியுள்ளது. Chat GPTயின் இவ்வகையான முன்னேற்றங்களால், செயற்கை நுண்ணறிவின் புதிய வசதிகளையும் நம்பகத்தன்மையும் உபயோகிப்பவர்களுக்கு கொண்டு வர OpenAI தன்னுடைய திறனை மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த புதிய அம்சம், பயனர்களின் தேடுதலை மேலும் பொருத்தமானதாக்கி, அவர்களின் தேவைகளை துல்லியமாக பூர்த்தி செய்ய உதவுகிறது. இது செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேடல் அனுபவத்தில் புதிய உயரங்களை நோக்கி எடுத்துச் செல்கிறது.

மேலும், OpenAI நிறுவனம் ChatGPTயின் அடுத்த பதிப்பை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த பதிப்பு மேலும் மேம்பட்ட தகவல்களை வழங்குவதோடு, பயனர்களின் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை நவீன பாதையில் முன்னெடுத்து செல்கின்றது. 


இவற்றின் மூலம், ChatGPT மற்றும் Gemini போன்ற புதிய தொழில்நுட்பங்கள், தகவல் தேடல் துறையை முற்றிலும் மாற்றியமைக்கின்றன. அவற்றின் வளர்ச்சியால், செயற்கை நுண்ணறிவு பயனர்கள் அனைவரின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் அடுத்தக் கட்டம்.

-S.B.

Post a Comment

Previous Post Next Post