Translate

45. முதலாம் நிஜாமின் வெந்தும், வேகாத ரொட்டி சின்னம்

 படித்ததில் பிடித்தது -45
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.

பாண்டியருக்கு மீன் கொடி, சோழருக்கு புலிக் கொடி, சேரனுக்கு வில் கொடி. அதுபோல், ஐதராபாத் சமஸ்தான மன்னர் நிஜாமுக்கு, "ரொட்டிக் கொடி' என்பது உங்களுக்கு தெரியுமா? "காம்ருதீன் கான்' என்ற பெயர் கொண்ட நிஜாம், தன் கொடியின் நடுவே, வெந்தும், வேகாத ரொட்டியை சின்னமாக அமைத்தார்.

இது, முதலாம் நிஜாமின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறது. ஐதராபாத்தின் மேற்கே, 480 கி.மீ., தொலைவில் உள்ள அவுரங்காபாத் நகரின் வெளியே, ஒரு சூபி மகான் இருந்தார். அவர் ஒருமுறை, காம்ருதீனுக்கு சப்பாத்தி ரொட்டிகளைத் தந்தார். குளிர் மிகுந்த அந்தப் பனிக் காலத்தில், அவரால் ஏழு ரொட்டிகளை மட்டுமே உண்ண முடிந்தது.

மேலும், சில ரொட்டிகளை உண்ணுமாறு, காம்ருதீனை (முதல் நிஜாமை) வற்புறுத்தினார் அந்த ஞானி. அவர் மறுத்து விடவே, அந்த ஞானி தீர்க்க தரிசனமாக, "ஐதராபாத்தின் முதல் நிஜாமான காம்ருதீன் வம்சத்தில், ஏழு மன்னர்கள் மட்டுமே இருக்குமாறு விதிக்கப்பட்டு விட்டது. அக்குடியில், ஏழு மன்னர்களுக்கு மேல் இருக்க முடியாது...' என்றாராம்.

இது மெய்யோ, பொய்யோ தெரியவில்லை. இக்குடியின் கடைசி மன்னரான நிஜாம், ஏழாமவர். இவர்தான், இந்தியாவுடன் தன் அரசை இணைப்பதற்கு முதலில் மறுத்து, பின்னர் வல்லபாய் படேல் நடவடிக்கை எடுத்ததும், ஐதராபாத் சமஸ்தானத்தை இணைத்தார்.

— ப.சிவனடி எழுதிய, "இந்திய சரித்திரக் களஞ்சியம்' நூலிலிருந்து...

Post a Comment

Previous Post Next Post