ராஜாஜி, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தபோது ஒரு கவிஞருக்குக் கடிதம் எழுதினார். அதில்:
வணக்கம். அன்புக்குரியவருக்கு ஒரு பெரும் வேலை வைக்க இதை எழுதுகிறேன்.
என், "வியாசர் விருந்து' பிரதி ஒன்று இத்துடன் வந்து சேரும். அதை ஒவ்வொரு அத்தியாயமாகத் தாங்கள் படித்து, என்னை ஆசீர்வதித்து ஒவ்வொரு அத்தியாயக் கதைக்கும் ஒரு வெண்பா எழுதித் தந்தால், இந்த நூலின் புதுப் பதிப்பில் வெண்பாக்களை சேர்த்து அச்சிட ஏற்பாடு செய்யலாம் என்பது என் ஆசை. அத்தியாயத்தில் முக்கிய கருத்து அல்லது கதையைச் சுருக்கமாகக் காட்டும்படி ஒரு வெண்பாப் பாட்டு இருந்தால் போதும். முடிந்தால் மிக்க புகழ் தரும்; பயன்படும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பர்.
— ராஜகோபாலாச்சாரி.
ஆனால், கவிஞரின் உடல்நிலை காரணமாக வெண்பாப் பாட்டு எழுதித்தர முடியவில்லை. இக்கடிதத்திற்கு அந்தக் கவிஞரின் மருமகனிடமிருந்து, "பெரிய அறிஞராகிய தங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்ற அவா மாமனாருக்கு மிகுதியாக உண்டு. அவ்வாறு செய்ய உடல்நிலை இடம் தரவில்லையே என்ற வருத்தமும், கவலையும் அதைவிடக் கூடுதலாக உள்ளன...' என்று பதில் வந்தது.
வெண்பா கேட்ட கவிஞர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
— "சோமலெ' எழுதிய, "பிரயாண இலக்கியம்' நூலிலிருந்து...
பிடித்தது -38
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
No comments:
Post a Comment