ஆங்கிலம் அறிவோமே – 4. கிளிண்டனை எப்படி அழைப்பது?
வாசகர் ஒருவர், “Ladies and
Gentlemen என்பது
மேடைப் பேச்சுக்கு மட்டும்தானா அல்லது கடிதங்களிலும் அப்படி அழைக்கலாமா?” என்று
கேட்டிருக்கிறார்.
கடிதங்களில் எப்படிப் பிறரை
அழைக்கலாம் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
தனிப்பட்ட கடிதங்களில்
உங்களுக்கு நெருக்கமானவரை எப்படி அழைத்துக் கடிதத்தைத் தொடங்கலாம் என்பது
உங்களுடைய இஷ்டம். வணிகக் கடிதங்களில் அல்லது அலுவலகக் கடிதங்களில் பிறரை எப்படி address செய்வது என்பதை
அறிந்து கொள்வோம்.
தனி நபராக இருந்தால் Dear Sir அல்லது Dear Madam. ஒரு நிறுவனத்துக்கு
என்றால் Dear
Sirs (என்ன
காரணத் தாலோ Dear
Sirs & Madams என்று
கடிதத்தில் எழுதுவதில்லை).
பெயரைக் குறிப்பிட
வேண்டுமென்றால்?
எடுத்துக்காட்டாக
ஆனந்த் என்பவருக்கு நீங்கள் பணி தொடர்பாக கடிதத்தை எழுதுகிறீர்கள் என்றால் Dear Mr. Anand என்று எழுத வேண்டும் (Dear Anand அல்லது My dear Anand என்பதெல்லாம்
‘வேலைக்கு’ ஆகாது). எனினும் அமெரிக்காவில் பணி தொடர்பான கடிதங்களில்கூட Dear Simen, Dear
Clara என்று
குறிப்பிடுவதைக் காண முடிகிறது. Ladies
and Gentlemen என்றும்
குறிப்பிடுகிறார்கள்.
Dear Mr. Anand என்பதற்குப் பிறகு
கட்டாயமாக கால்புள்ளி தேவை (Dear
Mr.Anand,). அமெரிக்க
ஆங்கிலத்தில் முக்கால் புள்ளியைப் பயன்படுத்துகிறார்கள் (Dear Mr.Anand:).
அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை
First
Lady என்று
குறிப்பிடுவார்கள். அவரது கணவரை எப்படிக் குறிப்பிடுவார்கள்?
இம்முறை ஹிலாரி கிளிண்டன்
ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதாலோ என்னவோ ஒரு வாசகருக்கு இது குறித்துக்
குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இதுவரை அமெரிக்காவின்
ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் மனைவிகள் அந்தந்த
காலகட்டத்தில் First
Lady என்று
அழைக்கப்பட்டார்கள். ஜனாதிபதியும், அவர்
மனைவியையும் சேர்த்து அழைக்கும்போது First couple என்பார்கள்.
ஜனாதிபதி பெண்ணாக இருந்தால்
அவர் கணவர் First
Gentleman என்றுதான்
குறிக்கப்படுவார்.
ஒருவேளை ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க ஜனாதிபதி என்றால் அவர் கணவர் பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக
இருந்தவர். எனவே அவர் Former
President என்று
குறிப்பிடப்படுவார்.
VICE - DEPUTY -
ASSOCIATE - ASSISTANT
Vice என்பதற்கு ‘பாவம்’
என்றொரு பொருள் உண்டு. அதாவது,
Virtue என்ற
வார்த்தை உணர்த்தும் புண்ணியம் என்பதற்கு எதிரான பாவம். ஆனால் இங்கே நாம் மேலே
குறிப்பிட்ட நான்கு similar
வார்த்தைகளின்
பொருள்களைத்தான் பார்க்கிறோம். Vice
என்றால்
அடுத்த அதிகாரம் கொண்டவர் என்று அர்த்தம். Vice-President என்றால் ஜனாதிபதிக்கு
அடுத்து இவருக்குத்தான் அந்த அதிகாரம்.
Deputy என்றாலும் அதே
அர்த்தம்தான். ஆனால்,
நடைமுறையில்
“Vice’’கள் குறைந்த
எண்ணிக்கையிலும் “Deputy’’கள் அதிக
எண்ணிக்கையிலும் இருப்பதுண்டு. அதாவது பொதுவாக ஒரு நகரத்துக்கோ ஒரு நாட்டுக்கோ ஒரு
Vice-Presidentதான். ஆனால், ஒரு அதிகாரியி ன் கீழ்
பல Deputy
Engineerகள்
பணி செய்யலாம். Associate,
Assistant ஆகியவை
இந்த வரிசையில் மேலும் அதிகாரம் குறைந்த பதவிகள்.
“வாடிக்கையாளருக்கு
அளிக்கப்பட்ட பொருள்களில் குறைபாடு நேர்ந்துவிட்டது. எப்படி மன்னிப்பு கோரலாம்? வெறும் sorry என்பது மட்டும்
போதாது’’ என்று வருத்தப்பட்ட ஒரு வாசகருக்கு சில ஆலோசனைகள்:-
# We are
embarrassed about the error. We will send you a fresh set promptly at no
additional charge.
# Problems like
this rarely occur. But this is in no way a consolation. I would like to meet
you to review, make corrections and see how we can reconcile this problem and
move forward.
# In your mail you
requested five extra as compensation. We will gladly provide eight.
No comments:
Post a Comment