Translate

"திராவிடியன் புரோகிரசிவ் பெடரேஷன்!' எப்படி டி.எம்.கே., ஆயிற்று?

தி.மு..,வை ஆங்கிலத்தில், டி.எம்.கே., என்கின்றனர்; ஆனால், ஆரம்ப காலத்தில் இந்தக் கட்சி, தன் பெயரை டி.பி.எப்., என்று தான் குறிப்பிட்டு வந்தது. அதாவது, "திராவிடியன் புரோகிரசிவ் பெடரேஷன்!' என்பதே இக்கட்சியின் ஆங்கிலப் பெயர். இது எப்படி டி.எம்.கே., ஆயிற்று? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்... திராவிட இயக்கக்காரர்களுக்கு அப்போது பகை ஏடாக விளங்கிய, "இந்து நாளேடு' சூட்டிய பெயர் தான் இது!

 ஒருமுறை, மும்முனைப் போராட்டம் ஒன்றை நடத்தியது தி.மு.., ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தை, "குலக் கல்வித் திட்டம்!' என்று குறை கூறி, அதை எதிர்த்து, ராஜாஜி வீட்டு முன் போராட்டம்... டால்மியாபுரத்திற்கு, "கல்லக்குடி' என்று பெயர் மாற்றக் கோரிப் போராட்டம்...

பிரிவினைவாதிகளான திராவிட இயக்கத் தலைவர்களை, "நான்சென்ஸ்' என்று சொன்ன நேருவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் நிறுத்தப் போராட்டம் என்று, மூன்று போராட்டங்களை ஒரே நாளில் நடத்தியது தி.மு.., இந்தப் போரட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு சம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது, தி.மு..,வை - டி.எம்.கே., என்றே கேலியாகக் குறிப்பிட்டது, "இந்து' ஆங்கில நாளிதழ். அதைக் கண்ட உடன்பிறப்புகள், "பாருங்க... எப்படி கிண்டல் பண்றான்!' என்று, அண்ணாதுரையிடம் சென்று குறை கூறினர். அண்ணாதுரையும், "நியாயம் தான்... நம் கட்சிக்கு, தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் எதற்கு? அதனால், நம் கட்சிப் பெயரை, நாமும் டி.எம்.கே., என்றே போடலாம்!' என்று கூறிவிட்டார். அன்று முதல், தி.மு..,காரர்களும், தங்கள் கட்சியை டி.எம்.கே., என்றே குறிப்பிடலாயினர்.   

தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -27

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.  

           

Post a Comment

Previous Post Next Post