தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -9
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
நார்மண்டியிலிருந்து எட்வர்ட், தன் ராஜாங்கத்தை மீட்பதற்காக படை பலத்துடன் இங்கிலாந்துக்குள் நுழைந்து, டேனஸ் யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவரது தளபதிகளில் ஒருவர் முழங்கினார்: ஒரேயொரு பகைவனைக் கூட உயிருடன் விட மாட்டோம் என்று.
எட்வர்ட் பதில் சொன்னார்: இந்த ராஜாங்கத்தை மீட்க வேண்டியவன் நான். ஆனால், பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்க நான் யார்? தனியாய் ஒரு வாழ்க்கை வாழ்வேனே தவிர, எனக்காக, யாரும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தக் கூடாது! என்று. போர் முகாம் கலைந்தது. நார்மண்டியிலிருந்து திரும்பி, அகிம்சை முறையில் போராடி, அரியணையை மீட்டார் எட்வர்ட்.
Post a Comment