இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
ஸ்ரீரங்கப் பட்டினத்திலுள்ள ரங்கநாதர் கோவிலுக்கு, பல அன்பளிப்புகளை வழங்கியிருக்கிறார் ஹைதர் அலி. சிருங்கேரி மடாதிபதிகளிடம், அவர் மிக்க மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். சிருங்கேரி சுவாமிகளுக்கு, அவர் எழுதிய நான்கு கடிதங்கள் இப்போது பாதுகாக்கப்பட்டுள்ளன. மராட்டியருக்கும், ஹைதர் அலிக்கு மிடையே, பகைமை இருந்தாலும், சிருங்கேரி சுவாமிகள் அங்கே பயணம் புறப்பட்ட போது, அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தார் ஹைதர் அலி. "தங்கள் பயணத்துக்காக ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஐந்து ஒட்டகங்கள், ஒரு பல்லக்கு ஆகியவற்றை அனுப்பியிருக்கிறேன். அன்னை சாரதா தேவியை அலங்கரிப்பதற்காக ஒரு பட்டுப் புடவையும், சுற்றிலும் மறைக்க திரைச்சீலைகளையும் அனுப்பியுள்ளேன். தங்களின் சொந்த உபயோகத்துக்காக, வேஷ்டிகளும், இரண்டு சால்வைகளும், செலவுக்கென 10,500 ரூபாயும் கொடுத்தனுப்பியிருக்கிறேன். அருள் கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டு கிறேன்...' என்று, ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஹைதர் அலி. — மாவீரன் திப்பு சுல்தான் நூலிலிருந்து...
OK
ReplyDeletePost a Comment