தமிழ்இந்து நாளிதழில் வாரந்தோறும் ஆங்கிலம் அறிவோமா என்ற தலைப்பில் திரு ஜி.எஸ் .எஸ் என்பவர் எழுதி வந்ததில் ஒரு சிலவற்றை மட்டும் நான் சேமித்திருந்தேன். அவைகளை உங்களின் பார்வைக்கு.
நன்றி தமிழ் இந்து
சில
வாரங்களுக்கு முன் சில விஷயங்களுக்கு passive voice தேவைப்படுகிறது
என்று குறிப்பிட்டிருந்தேன். இதன் தொடர்ச்சியாக ஒரு வாசகர் “இப்படிச் சுருக்கமாக
வைத்துக் கொள்ளலாமா? Subject உயிரற்றதாக இருந்தால் அதற்கு passive
voiceதான்
பயன்படுத்த வேண்டும் என்று கூறலாம் அல்லவா?’’ என்றார்.
வாக்கியங்களில்
முடிந்தவரை passive
voice-ஐத்
தவிர்ப்பது நல்லது என்று எனக்குப் படுகிறது. Active voice
கொண்ட
வாசகங்கள்தான் பெரும்பாலும் படிக்க எளிமையாக இருக்கும்.
யோசித்துப் பாருங்கள். “நாற்று நட்டாயா? களை பறித்தாயா?’’ என்று (சினிமா) கட்டபொம்மன் active voice-ல் தூய தமிழில் பேசி ஆங்கிலேயனை அதிர வைத்ததுதானே சிறப்பாக எடுபட்டது?
“நாற்று
உன்னால் நடப்பட்டதா? களை உன்னால் பறிக்கப்பட்டதா?
ஏற்றம்
உன்னால் இறைக்கப்பட்டதா?… உன்னால்
எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரியப்பட்டதா?’’ என்று
வசனம் எழுதப்பட்டிருந்தால் அது ரசிக்கும்படியாகவா இருக்கும்?
அப்படியானால்
உயிரற்ற (inanimate)
பொருள்
subject
ஆக
அமைந்தால் என்ன செய்வது என்கிறீர்களா? அதாவது,
Thunder was heard at the mountain என்பது passive
voice-ல்தானே
அமைய முடியும் என்கிறீர்களா?
அவசியமில்லை.
இதற்குப் பதிலாக Thunder growled in the mountain என்று
குறிப்பிடலாம். இப்போது இது active voice ஆகிவிட்டது.
இடியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப growl என்பதற்குப்
பதிலாக rumble,
mutter, grumble ஆகியவற்றில்
ஒன்றைப் பயன்படுத்தலாம்.
நீதிமன்றம்
தொடர்பான சில செய்திகளில் ‘locus standi’ என்ற
வார்த்தை இடம்பெறுகிறது. இதன் பொருள் என்ன என்பது தெரியுமா?
நீதிமன்றம்
ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமென்றால் வாதிக்கு locus standi
இருக்க
வேண்டும்.
ராகவன்
என்பவர் குமார் என்பவரை அடித்தார் என்றால் வெறும் பார்வையாளரான கேசவன் என்பவர்
ராகவன் மீது வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால் கேசவனுக்கு இதில் locus
standi இல்லை.
ஒரு சட்டம்
தவறானது என்று நீங்கள் வழக்கு தொடுத்துவிட முடியாது - அந்தச் சட்டம் உங்களை
பாதித்திருந்தாலொழிய. ஒரு செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீங்கள் வழக்கு
தொடுத்தால் அந்தச் செயலால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால்
நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்துக்கொள்ளாது. ஏனென்றால் உங்களுக்கு locus
standi இல்லை.
(இருதார மணம் சட்ட மீறல். என்றாலும் யாராவது இரண்டாவது திருமணம் செய்துகொண்டால்
முதல் மனைவி மட்டும்தான் கணவன்மீது வழக்கு தொடுக்கலாமே தவிர பிற உறவினர்களோ பொது
மக்களோ அல்ல. ஏனென்றால் அவர்களுக்கு locus standi இல்லை
என்று வாதிடப்படும்.)
HUMANITARIAN - PHILANTHROPIST
Humanity
என்றால்
மனிதாபிமானம். Humanitarian
என்றால்
மனித இனத்தின்மீது அனுதாபம் கொண்டவர். சக மனிதர்களுக்கு மனிதாபிமானத்துடன்
(இரக்கத்துடன்) உதவுவார்.
Philanthropist
என்றால்
அவர் அனுதாபி மட்டுமல்ல, சக மனிதர்களை
மனதார விரும்புவர். மனித இனத்தின்மீது பற்று கொண்டவர்.
Stable
என்றால்
என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். நிலையாக,
steady ஆக
இருப்பது என்று அர்த்தம். தமிழக மக்கள் அனைவரையுமே stable ஆக
இருக்க வைப்போம் (ஒரே கையெழுத்திலோ, படிப்படியாகவோ)
என்று எல்லா கட்சித் தலைவர்களும் தேர்தல் வாக்குறுதி அளித்ததை மறக்க முடியுமா!
குதிரைகள்
தங்கவைக்கப்படும் இடத்தையும் stable என்கிறார்கள்.
Hutch
என்றால்
உங்களுக்குத் தெரிந்த அர்த்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்கிறது. முயல்களைத்
தங்கவைக்கும் இடத்தை அப்படிக் குறிப்பிடுகிறார்கள். Kennel என்றால்
நாய்களைத் தங்கவைக்கும் இடம்.
Pen
என்பது
எழுதுகோல் மட்டுமல்ல மாடுகள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடம்.
Granary
என்றால்
கிடங்கு என்பதும் அது தானியங்கள் சேமிக்கும் இடம் என்பதும் உங்களுக்குத்
தெரிந்திருக்கும்.
Cantonment
என்ற
வார்த்தையை அவ்வப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள். ராணுவ வீரர்களுக்கான வீடுகள்
அமைந்திருக்கும் பகுதியைத்தான் Cantonment என்பார்கள்.
She
is one of the woman who works hard.
She
is one of the woman who work hard.
இந்த
இரண்டில் எது சரி?
இரு
வாக்கியங்களுமே தவறானவை. One of the என்பதைத்
தொடரும் noun
பன்மையாகத்தான்
இருக்க வேண்டும். One of the pens, one of the students, one of the
directors. எனவே
அந்த இரு வார்த்தைகளிலும் பன்மையைப் பயன்படுத்திவிட்டு பிறகு பார்ப்போம்.
1.
She is one of the women who works hard.
2.
She is one of the women who work hard.
மேலே உள்ள
இரண்டு வாக்கியங்களில் எது சரியானது? Present tenseல் singular
noun என்றால்
works
என்ற
பயன்பாடு சரி. Plural
என்றால்
work
என்ற
verb-ஐப்
பயன்படுத்துவதுதான் சரி.
One
of the women என்பது
singularதானே?
(அதாவது
பெண்களில் ஒருத்தி). எனவே works hard என்பதே
சரியானது என்று நீங்கள் குறிப்பிட்டால் அது தவறு. இங்கே ‘கடினமாக வேலை செய்யும்
பெண்களில் இவளும் ஒருத்தி’ என்றுதான் அர்த்தம். எனவே She is one
of the women who work hard என்பதுதான் சரி.
சிப்ஸ்
Junction
என்றாலும்
juncture
என்றாலும்
ஒன்றுதானே?
ஒன்றுதான்.
சந்திக்குமிடம்,
சந்தி.
எனினும் juncture
என்ற
வார்த்தை phraseல்தான்
பயன்படுத்தப்படுகிறது - at this juncture.
#
Confabulation என்றால்?
பேச்சு.
என்றாலும் அந்தரங்க (ரகசிய) பேச்சைக் குறிக்க இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
மனவியல் மருத்துவத்தில், மறதி உண்டாகும்போது
(அதை ஈடு செய்ய) கற்பனையாக எதையோ பேசுவதையும் இப்படிக் கூறுகிறார்கள்.
#
She is histotrionic என்றால்?
Very
dramatic. எல்லாவற்றிலும்
ஒரு நாடகத்தனம்
Courtesy : Tamil Hindu
No comments:
Post a Comment