இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
"கதர்' என்பது கையால் நூற்று, கைத்தறியில் நெய்த துணி. இந்தியாவில் தொன்றுதொட்டு இருந்த நூற்றல் தொழில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் அழிக்கப்பட்டு, பிரிட்டிஷ் ஆலைத் துணிக்கு, இந்தியா அடிமையானது.
இந்தியா சுதந்திரமடைய வேண்டுமானால், நூற்றல் தொழில், புத்துயிர் பெற வேண்டும் என்று காந்திஜி உணர்ந்தார். அவரது தலைமையில் நடைபெறற சுதந்திர இயக்கத்தில், நூற்றலும், கதரும் முக்கியத் திட்டம்.
கிராமவாசிகளின் வேலையின்மையையும்,
வறுமையையும் நீக்கி, ஆடைத் தேவையைச் சுதந்திரமாகப் பூர்த்தி செய்வது,
கதரியக்கத்தின் நோக்கம். ஆனால், உற்பத்தி செய்வோர்,
பொதுவாகக் கதர் உடுத்துவதில்லை. பெரும்பாலும் எல்லா கதரும் நகரங்களில் விற்பனையாகி வந்தது.
கதரின் விலை, ஆலைத்துணியை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தேசப்பற்று, தியாகம், ஏழைகளின் பால் கருணை முதலியவற்றால், அது விற்பனையாயிற்று. ஆலைத் துணியுடன் போட்டியிட, நூற்றல் கூலியைக் குறைத்து, நாளடைவில் கதரின் விலை குறைக்கப்பட்டது. அதனால், எட்டு மணி நேரம் நூற்பவருக்கு, ஒரு அணா கூட கிடைக்கவில்லை. 1935ல், காந்தியடிகள், குறைந்தது எட்டு மணி நேரம் நூற்பவருக்கு, எட்டு அணா கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபடியால், முதல் கட்டமாக மூன்று அணா வரை, கதர் சங்கம் கூலி கொடுத்தது.
Post a Comment