Translate

85 ஒற்றரின் இயல்புகள்

 சங்கத்தமிழ் 2. – திரிகடுகம் 85 ஒற்றரின் இயல்புகள்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். 

இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். 

திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். 

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது

எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி

உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம். . . . .[85]

எள்ளப்படும் மரபிற்று ஆகலும்: பிறரால் இகழப்படும் தோற்றத்துடன் இருத்தல்.

உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும்: மறைக்கப்பட்ட தகவல்களைக் கேட்டு மறக்காத கூர்மையான அறிவு.

முட்டு இன்றி உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும்: தடையில்லாமல் மறைக்கப்பட்ட தகவல்களைச் சொல்லும் திறமை.

இம் மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம்: இந்த மூன்றும் சிறந்த உளவாளியின் பண்புகள்.

To have a demeanor that is easily overlooked: To possess an appearance that does not attract attention.

Sharpness of mind to hear and remember hidden information: The keen intellect to absorb and retain concealed details.

The ability to reveal hidden information without hindrance: The capacity to disclose covert facts without obstruction.

These three are the qualities of a skilled spy: These three attributes define the characteristics of an adept intelligence agent.

தன் செயல்கள் பகைவருக்குத் தெரியாமலும், நடந்த காரியத்தைக் கேட்டு மறவாதிருத்தலும், அதனைத் தடையின்றி தெளிவாகச் சொல்லும் திறமையும் கொண்டவர்களே சிறந்த வேவுகாரனது குணமாகும்.



Post a Comment

Previous Post Next Post